போச்சம்பள்ளி அருகே திடீரென பற்றி எரிந்த கார் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மூவர்


போச்சம்பள்ளி அருகே திடீரென பற்றி எரிந்த கார் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மூவர்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அகரம் தட்ரஹள்ளி சந்திப்பு சாலை அருகே சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் காரில் இருந்த மூவரும் அதிர்ஷ்டவசமாக தப்பி வெளியேறினர்.

தர்மபுரியை சேர்ந்தவர் கணேசன், தனது தாயார் அன்னபூரணையுடன் அகரம் கிராமத்தில் உள்ள தனது சகோதரி மலர் குடும்பத்தாரை சந்தித்து விட்டு கணேஷ் அன்னபூரணி மற்றும் மலர் ஆகிய மூவரும் மீண்டும் தர்மபுரி திரும்பிக் கொண்டிருக்கையில் காரில் ஏற்பட்ட ஏசி பழுது காரணமாக திடீரென தீப்பற்றி எரியத் துவங்கியுள்ளது புகை வந்ததை கண்டதும் கணேசன் மற்றும் காரில் இருந்த இருவரும் உடனடியாக வெளியேறினர்.  அதற்குள்ளாக கார் மலமலவென தீப்பிடித்து எரியத் தொடங்கியது அக்கம் பக்கத்தினர் போச்சம்பள்ளி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். 

 தகவலின் பேரில் வந்த போச்சம்பள்ளி தீயணைப்பு துறையினர் பற்றி எரிந்து கொண்டிருந்த காரை அணைத்தனர்.

அதற்குள்ளாக கார் முற்றிலுமாக எரிந்து முடிந்தது.  இந்த சம்பவம் குறித்து நாகரசம்பட்டி போலீசார்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments