புதுக்கோட்டை இறையூர் கிராமத்தில் பட்டியலின மக்களுக்கான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம், தற்போது பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது

புதுக்கோட்டை

புதுக்கோட்டை அருகே முட்டுக்காடு ஊராட்சிக்குட்பட்ட இறையூர் கிராமத்தில் பட்டியலின மக்களுக்கான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம், அந்த கிராமத்தில் உள்ள கோயிலில் பட்டியலின மக்களுக்கு வழிபாடு உரிமை மறுக்கப்பட்ட விவகாரம், அதேபோல் அங்குள்ள டீக்கடையில் இரட்டை குவளை முறை பயன்படுத்தபட்ட சம்பவம் இவை குறித்து விசாரித்து தீர்வு காண்பதற்காக அந்த கிராமத்தில் வசிக்கும் பட்டியலின சமூக மக்கள் உள்ளிட்ட மூன்று சமூக மக்கள் பிரதிநிதிகளுடனான சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் தற்போது இலுப்பூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் குழந்தைசாமி தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த சமாதான கூட்டத்தில் இறையூர் கிராமத்தில் வசிக்கும் மூன்று சமூகங்களை சேர்ந்த மக்களின் பிரதிநிதிகள் 26 பேர் பங்கேற்பு.

வேங்கை வயல் கிராமத்தில் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனித மலம் கலந்த சம்பவம் எதிரொலியாக மாவட்ட ஆட்சித் தலைவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் அரசு அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்ட பொழுது அப்பகுதி மக்கள் தங்கள் பகுதியில் தீண்டாமை கடைபிடிக்கப்பட்டு வருவதாக குற்றம் சாட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை எடுத்த நிலையில் கிராமத்தில் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர்

இந்த ஆய்வின்போது கிராம மக்கள் சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் கிராம மக்களிடையே விசாரணை மேற்கொண்டார்
அப்பொழுது தங்களது கிராமத்தில் தங்களுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை என்றும் கிராமத்தில் தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவது என்றும் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை விடுத்தனர். தங்கள் கிராமத்தில் தங்களுக்கு ஊரில் உள்ள டீக்கடையில் இரட்டை தமிழர்கள் பயன்படுத்தி தங்களுக்கு தேநீர் வழங்குவதாகவும் மேலும் கோவிலுக்குள் சென்று வழிபட அனுமதி மறுப்பதாகவும் கோரிக்கை விடுத்தனர் கிராம மக்களின் கோரிக்கை ஏற்று கிராமத்தில் உள்ள டீக்கடையில் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் ஆய்வு செய்தனர். தொடர்ந்து ஆதிதிராவிட பகுதி மக்களை ஊரில் உள்ள அய்யனார் கோவிலில் திறந்து வழிபாடு செய்ய நடவடிக்கை மேற்கொண்டார். பல ஆண்டுகளாக தங்களை கோவிலுக்குள் நுழைய மறுக்கப்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் உடனடியாக நடவடிக்கை எடுத்து தங்களை வழிபாடு செய்ய வைத்தது மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆதி திராவிட பகுதி மக்கள் கோவிலுக்குள் சாமி கும்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது திடீரென்று பிற சமுதாயத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் திடீர் என்று சாமியாடி ஆதிதிராவிட மக்களை கோவிலுக்குள் ஏன் வந்தாய் என்று கேட்டதால் மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்ட அலுவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் சாமி ஆடிய பெண் மீதும் இரட்டை டம்ளர் முறையை பயன்படுத்திய டீக்கடை உரிமையாளர்கள் மீதும் எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வருவாய்த் துறையினர் மற்றும் காவல் துறையினருக்கு  உத்தரவு பிறப்பித்துள்ளார்..மேலும் சம்பவம் குறித்து வருவாய்த்துறையினர் மற்றும் காவல் துறையினரை தீவிர விசாரணை மேற்கொண்டு விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.
மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கள் கிராமத்திற்கு வந்து உடனடியாக தங்களது கோரிக்கைகளை கேட்டு அறிந்து நடவடிக்கை மேற்கொண்டது குறித்து ஆதிதிராவிடபகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்...

செய்தியாளர் சிவராஜ் 

Comments