திருவள்ளூரைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் பேருந்தில் சபரிமலை சென்று திரும்பும் போது விபத்து

திருவள்ளூரைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் பேருந்தில் சபரிமலை சென்று திரும்பும் போது விபத்து. சிறு காயங்களுடன் ஐயப்பபக்தர்கள்  தப்பினர்
 

திருவள்ளூரில் இருந்து 28 ஐயப்ப பக்தர்கள் தனியார் பேருந்தில் சபரிமலைக்கு தரிசனத்திற்காக புறப்பட்டு சென்றனர். அங்கு தரிசனம் முடித்து இன்று அதிகாலை புறப்பட்டனர். பேருந்து பத்தணம் திட்டா அருகே ளாகா பகுதியை கடக்கும் போது எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, விபத்தில் சிக்கி சாலையோரமாக கவிழ்ந்தது. இவ்விபத்தில் ஒரு சில ஐயப்ப பக்தர்கள் சிறு காயமடைந்த நிலையில், பெரும்பாலானோர் எவ்வித பாதிப்பும் இன்றி அதிர்ஷ்டவசமாக தப்பினர். கடந்த தினங்களுக்கு முன்பு இதே பகுதியில் நடைபெற்ற விபத்தில் பேன் கவிழ்ந்து சென்னை தாம்பரம் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமியான ஐயப்ப பக்தை சங்கமித்ரா உயிரிழந்ததோடு 17 பேர் காயமடைந்த சம்பவம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

Comments