நடிகர் விஜய் திரையுலகில் 31 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் நிகழ்வினை கொண்டாடும் வகையில் அரூர் தீர்த்தமலை ஆதரவற்றோர் மக்களுக்கு குளிர்கால போர்வைகள் வழங்கி விஜய் ரசிகர்கள் மக்களோடு கொண்டாடினர்
நடிகர் விஜய் திரையுலகத்திற்கு வந்து 30 ஆண்டுகள் கழித்து 31 வது ஆண்டில் கலைபயணத்தில் அடி எடுத்து வைக்கும் நிகழ்வி
னை அரூர் நகர இளைஞரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தீர்த்தமலை அடிவாரத்தில் கொண்டாடினர்.
அகில இந்திய மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்தன் உத்ரவின் பெயரில் தருமபுரி மாவட்ட தலைவர் தாபா எம்.சிவா மற்றும் மாவட்ட இளைஞர் அணி தலைவர் கி.விஜயகாந்த் அறிவுறுத்தலின்படி தீர்த்தமலை அடிவாரத்தில் உள்ள வீடுகள் இல்லாத சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றவர்களுக்கு பனி மற்றும் குளிர்காலத்தில் உபயோகிக்கும் வகையில் இளைஞரணி நகரத் தலைவர் ஜா.மதலை முத்து தலைமையில் 50க்கும் மேற்பட்டோர்களுக்கு போர்வை மற்றும் இரவு உணவு அளித்தனர்.
இதில் செயலாளர் கி.முருகேசன், பொருளாளர் சீனிவாசன், துணைத் தலைவர் விக்னேஷ், துணைச் செயலாளர் அருணாச்சலம், இ.செயலாளர் நாகஅர்ஜூன் உள்ளிட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் பலர் கலந்துக்கொண்டனர்.
Comments
Post a Comment