மாம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் 2004-2005ம் ஆண்டில் படித்த பத்தாம் வகுப்பு மாணவ மாணவிகள் சந்திப்பு நடைபெற்றது.



அரூர் அடுத்த மாம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் 2004-2005ம் ஆண்டில் பத்தாம் வகுப்பு படித்த மாணவ மாணவிகள் சந்திப்பு நடைபெற்றபோது அவர்கள் படித்த வகுப்பறையில் அமர்ந்து கடந்த கால நிகழ்வுகளை நினைவுக்கொண்டனர். 


பின்பு பள்ளிக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பிலான நாற்காலி, சுவர் கடிகாரம் உள்ளிட்ட உபகரண பொருட்களை தலைமை ஆசிரியர் சேகர் அவர்களிடம் அன்பளிப்பாக வழங்கி, பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்து தருவதாக உறுதியளித்தனர். இதனைத்தொடர்ந்து ஒருவருக்கு ஒருவர் மகிழ்ச்சியாக அன்பை வெளிப்படுத்தி அசைவ உணவை பரிமாறிக் கொண்டு பிரியாவிடை சென்றனர்.

Comments