பீனியாற்றில் வரலட்சுமி கழிவு நீர் கலப்படம் அரசு ஊழியர்கள் மனித தன்மையை உணர்வார்களா ? விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே வரலட்சுமி கிழங்கு மில் ஆலை இயங்கி வருகிறது இந்த ஆலையின் அருகே ஓடும் வினியாற்றில் கிழங்கு கழிவு நீரை கலப்பதினால் விவசாய நிலங்கள் பெரும்பளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த நீரை குடித்த மாடுகள் ஆடுகள் இறந்ததாகவும் கடந்த ஏழு மாதத்திற்கு முன்பே விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வைத்து இதனை தடுத்து நிறுத்த கோரி மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு கோரிக்கை வைத்ததாக விவசாயிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. இந்தப் பீனி ஆற்றில் கலக்கும் வரலட்சுமி கழிவு நீரால் ஆற்றில் இருக்கும் மீன்கள் செத்து மிதந்தது என்று ஏற்கனவே மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது ஆனால் இதுவரையும் எந்த அதிகாரிகளும் இந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை மீண்டும் மீண்டும் மழைக்காலங்களில் வரலட்சுமி நிறுவனத்தில் உள்ள பழைய கழிவுநீர்களை கலந்து வருகின்றனர் இதனால் விவசாயத்தில் உள்ள நெற்பயிர்கள் கருகி விவசாயம் செய்ய முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளன. இதனால் அரசு அதிகாரிகளின் மீது நம்பிக்கையிலிருந்து தங்களது கோரிக்கைகளை கண்டன ஆர்ப்பாட்டத்தின் மூலமாக மனிதனுடைய வாழ்வாதாரத்தையும் விவசாயத்திலும் உணவு முறைகளையும் அழிக்கும் நிலையை வரலட்சுமி ஸ்டார்ச் நிறுவனம் செய்து வருகிறது. இதை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை, மக்களின் நிலைகளையும், விவசாயிகளின் வாழ்வாதாரம் உணர்ந்து  சொல்வதற்காக தற்பொழுது நாங்கள்  சாலைக்கு வந்து போராடும் நிலை உருவாகியுள்ளதை பற்றி நினைக்கும் பொழுது மிகுந்த வேதனை அளிக்கிறது. என்று பாப்பிரெட்டிப்பட்டி விவசாயிகள் புலம்புகின்றனர். நாங்கள் மனிதர்கள் மனிதனுடையை வாழ்வாதாரத்திற்கு போராடுகிறோம் நாங்கள் கொடுக்கும் வரியில் வாங்கும் சம்பலடத்திற்கு மனிதனாக உணர்ந்து வேலை செய்ய அரசு ஊழியர்கள் உணர்வார்களா என்று பொதுமக்கள் சார்பில் கேள்வி எழுப்புகின்றனர்.

Comments