முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம் அரூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்  கண் பரிசோதனை முகாம் ஜோதி லேசர் கண் மருத்துவமனை நிர்வாக குழுவினர் நடத்தினர். இலவசமாக கண் பரிசோதனை செய்த பின்பு பயனாளர்களுக்கு பல்வேறு வகையான அறிவுரைகளை கண் பரிசோதனை செய்த நிர்வாக குழுவினர் வழங்கினர். முகாமில் அரூர் வட்டாட்சியர் கனிமொழி உள்ளிட்ட வருவாய் துறையினரும் பரிசோதனை செய்து கொண்டனர்.

Comments