அதிகாரப்பட்டி பஞ்சாயத்தில் தூய்மை பணியாளர்கள் மூலம் சுகாதார நடைபயணம் நிகழ்ச்சி நடைபெற்றது.

பாப்பிரெட்டிப்பட்டி

தருமபுரி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் தூய்மை பாரதம் (ஊரகம்) கிராம தன்னிறைவு திட்டம் மூலமாக அதிகாரப்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட கிராம புற பகுதிகளில் நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது. இந்த நடைபயணத்தில் வீடு மற்றும் பொது இடங்களில் தண்ணீர் இருக்கும் பகுதிகளை அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்யப்பட்டது.  மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மக்களிடையே  தற்பொழுது இருக்கக்கூடிய மழைக்காலங்களில் பாதுகாப்பாக இருக்கும் படி விழிப்புணர்வு செய்தனர்.  இந்த பேரணியில் அதிகாரப்பட்டி கிராம பஞ்சாயத்திற்கு உட்பட்ட தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Comments