திமுக இந்தி எதிர்ப்பு பொதுக்கூட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலையத்தில் நடைப்பெற்றதால் மழையில் தவித்த கல்லூரி மாணவர்களும் பள்ளி மாணவர்களும் !
திமுக இந்தி எதிர்ப்பு பொதுக்கூட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலையத்தில் நடைப்பெற்றதால் மழையில் தவித்த கல்லூரி மாணவர்களும் பள்ளி மாணவர்களும் !
தருமபுரி மேற்கு மாவட்ட (திமுக) திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இந்தி தினிப்பை எதிர்த்து மா. செ. பழனியப்பன் தலைமையில் பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலையத்தில் நடைபெறுவதற்காக 20-40 அடிக்கு மேடைகள், சுமார் 300 க்கும் மேற்பட்ட நாற்காலிகள் அமைக்கப்பட்டது. பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலையத்தை ஆக்கரிமிப்பு செய்து இந்நிகழ்ச்சியை நடத்தியதால் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள்,பொதுமக்கள், பாதுகாப்பான இடத்தில் ஒதுங்கி நிற்க கூட வழியின்றி பரிதவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
சேலம், அரூர், தருமபுரி, போன்ற பகுதியில் இருந்து வரும் பேருந்துகள் , பேருந்து நிலையத்திற்கு செல்லமுடியாமல் சாலையில் திரும்ப முயன்றதால் சிறிது போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. மழை பொழியும் பகுதிகளில் இந்தி திணிப்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் தேதியை மாற்றி வானிலையின் சூழலுக்கு ஏற்றவாறு ஆர்ப்பாட்டத்தை தொடங்கவும் என்று திமுக தலைவர் மற்றும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்த நிலையில் இருந்தும், மழையில் இந்த பொதுகூட்டத்தை நடத்தியால் மழையில் நனைந்த திமுக தொண்டர்களும் வேதனை அளிக்கிறது என்று புலம்புகின்றனர்.
Comments
Post a Comment