தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களில் பெரிய அளவிற்கு தமிழக வன நிலங்கள் பெரியார் வைகை பாசன விவசாய சங்க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்


தேனி மாவட்டம் கம்பத்தில் பெரியார் வைகை பாசன விவசாய சங்கம் சார்பில் கேரளா அரசால் நடத்தப்படும் டிஜிட்டல் ரீ சர்வே முறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தை விவசாயிகள் நடத்தினார்கள்.

பெரியார் வைகை பாசன விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் தலைமையில் கம்பம் வ.உ.சி. திடல் அருகே விவசாயிகள் ஒன்று கூடி கேரள மாநில அரசால் திட்டமிட்டு தற்பொழுது நடத்தப்படும் டிஜிட்டல் ரீ சர்வே முறையால், தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களில் பெரிய அளவிற்கு தமிழக வன நிலங்கள் பறிபோகும் அபாயம் இருப்பதாகவும்

ஏற்கனவே 1956 மொழிவழி பிரிவினையின் போது, 1400 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கேரளாவிடம் தமிழகம் இழந்திருக்கும் நிலையில், தற்போது நடைபெறும் டிஜிட்டல் ரீ சர்வே முறையால், மிகப்பெரிய அளவில் தமிழக நிலங்களை இழக்கும் அபாயம் இருப்பதாக கூறி

 முறையான வழிமுறைகளை பின்பற்றி, தகுந்த அதிகாரிகள் குழுவை கேரளாவிற்கு அனுப்பி, தமிழக எல்லையில் உள்ள 15 தாலுகாக்களில், டிஜிட்டல் ரீ சர்வே முறையை நிறுத்துவதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கேரள அரசை கண்டித்து கோஷங்களை எலுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள்.

Comments