தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் வரும் 27ஆம் தேதி இளைஞர் அணி மாநில செயலாளர் மற்றும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுடைய பிறந்தநாள் அன்று நலத்திட்ட உதவிகள் வழங்கி கிளைகள் தோறும் கொண்டாட வேண்டும் என்றும். மற்றும் இந்நிகழ்ச்சியில் மாநில மாவட்ட ஒன்றிய நகர ஊராட்சி கிளை நிர்வாகிகள் மாவட்ட ஒன்றிய பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் சார்பு அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் ஆகியோர் பிறந்த நாள் விழா ஏற்பாடுகளை செய்து நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும் என திமுக தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த கோரிக்கை தற்போது சமூக வலைதளங்களில். பரவி வருவதால் தற்பொழுது தடங்கம் சுப்பிரமணிக்கும் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் தர்மபுரி திமுக தொண்டர்கள் மாவட்டம் முழுவதும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Comments
Post a Comment