நாட்டு துப்பாக்கி மற்றும் ஏர்கன்களை வைத்திருந்த நல்லாம்பட்டியை சேர்ந்த MBBS கவின்குமாரை கர்நாடக மாநில வனத்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகேயுள்ள ஏரிக்காடு பகுதியில் வசித்து வரும் பச்சியண்ணன் மகன் மாரிமுத்து என்பவர் நாட்டு துப்பாக்கி மற்றும் ஏர்கன்களை வைத்து தமிழ்நாடு மற்றும் கர்நாடகா எல்லையில் உள்ள ஒகேனக்கல், ஆலம்பாடி , செங்கப்பாடி உள்ளிட்ட வனப்பகுதிகளில் தனது நண்பர்களான நல்லாம்பட்டியை சேர்ந்த MBBS மருத்துவ படிப்பை முடித்துள்ள கவின்குமார் மற்றும் விக்னேஷ் ஆகியோருடன் சென்றுள்ளனர்.

மூன்று பேரும் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு  நல்லிரவு நேரத்தில் கர்நாடக மாநிலம்  கோபிநத்தம் வனச்சரக பகுதிகளுக்குள்  நாட்டு துப்பாக்கி மற்றும் காற்றழுத்தத்தால் இயங்கும் ஏர்ஃகன் துப்பாக்கி ஆகிய இருவித துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு ஆலாம்பாடி துறை வனப்பகுதியில் சுற்றித்திரிந்துள்ளனர். அப்போது விலங்குகளை கண்காணிக்க வைக்கப்பட்டிருந்த கேமராவில் இவர்கள் சுற்றித்திரிவதை புகைப்படம் எடுத்துள்ளது. இந்த புகைப்படத்தை வைத்து  கர்நாடக மாநிலம் கோபிநத்தம் வனச்சரக அலுவலர்கள் ஒகேனக்கல் ஏரிக்காடு பகுதியைச் சேர்ந்த மாரிமுத்துவை நேற்று இரவு கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவர் மறைத்து வைத்திருந்த ஒரு நாட்டுத் துப்பாக்கி மற்றும் ஒரு ஏர்கன் ஆகியவைகளை பறிமுதல் செய்தும் அவருடன் வனப்பகுதிக்குள் சென்ற MBBS மருத்துவ படிப்பு முடித்த கவின்குமார்  மற்றும் விக்னேஷ் ஆகியோரையும் கர்நாடக மாநில வனத்துறையினர் கைது செய்து கொள்ளேகால் வன அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments