முதல்வர் படத்தையும் சுதந்திர தியாகிகளின் புகைப்படத்தை தூக்கி எறியுங்கள் தர்மபுரி CEO ! DEO ! மாட்டுங்க பாரத மாதா படத்தை ! நடவடிக்கை எடுக்க பயப்படுகிறதா திராவிட அரசு ! கிண்டலிடிக்கும் கூட்டணி கட்சிகள்

முதல்வர் படத்தையும்  சுதந்திர தியாகிகளின் புகைப்படத்தை தூக்கி எறியுங்கள்  தர்மபுரி CEO - DEO ! மாட்டுங்க பாரத மாதா படத்தை !  நடவடிக்கை எடுக்க பயப்படுகிறதா திராவிட அரசு ! கிண்டலிடிக்கும் கூட்டணி கட்சிகள்  

தர்மபுரி

           தருமபுரி நகரபகுதியான இலக்கியம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 600 மாணவர்கள் படித்துவருகின்றனர். இந்த பள்ளிகூடத்தில் சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளின் புகைபடம் இல்லை  என்பதை நினைத்து  சமூக ஆர்வலர்கள் இது தருமபுரி தருமபுரி மாவட்டத்திற்கு ஒரு தலைகுனிவான செயல் என்கின்றனர்.

குறிப்பாக  கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் புகைப்படம் இல்லை, அனைத்து சமூகமும் படிக்கவேண்டும் என சட்டம் இயற்றிய டாக்டர் அம்பேத்கர் புகைப்படம் இல்லை, பாரதியார் புகைப்படம் இல்லை, ஆசிரியர் தினமாக கொண்டாடப்படும் இராதாகிருஷ்ணன் புகைப்படம் இல்லை, ஆனால் ஆர் எஸ் எஸ் சைசார்ந்த நபர்கள்  வழங்கிய பாரத மாத புகைப்படம் மட்டும் தலைமை ஆசிரியர் அறையில் வைத்துள்ளனர்.  அந்த புகைப்படத்தை  கொடுத்ததே CEO குணசேகரன்  DEO ராஜகோபால் தான்.

  அப்படிஎன்றால் அப்பள்ளியின் தலைமையாசிரியர் செய்யும் செயலுக்கும், அங்கே நடக்கும் தவறுகளுக்கும் CEO குணசேகரன்  DEO ராஜகோபால் அவர்களுக்கும்  நூறு சதவீதம் தொடர்பு இருப்பதை  அந்த பள்ளியில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளும் உணரவைக்கின்றது. 

CEO DEO குணசேகரன் ஆசிரியர் , சித்ரா ஆசிரியர் கொடுத்த  பாரதா மாதா   புகைப்படம் 

இவர்களை மறைமுகமாக மிரட்டும் வல்லமை கொண்ட தலைவன்தான்  தலைமையாசிரியர்  வலதுபுறம் வெள்ளைச்சட்டை அணிந்த  துரைசாமி ஆசிரியர் ! 

தலைவர்களின் புகைப்படம் இல்லை 

தர்மபுரியில் உள்ள சமூக ஆர்வலர்கள் கொடுக்கும் தலைவர்களின் புகைப்படங்கள் குப்பை தொட்டியில் இருப்பது போன்று ஒரு அறையில்  உள்ளதாம். இந்த கொடுமைகளையும் CEO குணசேகரன்  DEO ராஜகோபால்  பார்த்துவிட்டு எந்த ஒரு விசாரணையும் செய்யாமல்  கண்டும் காணமல்  சென்றதுதான் காலக்கொடும !   நமது நாட்டின் சுதந்திரத்திற்காகவும், கல்விக்காகவும், அடிப்படை உரிமைக்காகவும் போராடிய தலைவர்களின் புகைப்படத்தை  மாணவர்களிடம் அடியாள படுத்தாமல் வேறென்ன மாணவர்களுக்கு கற்றுத்தர போகிறார்கள் ! மேலே உள்ள புகைப்படத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.. 

இதை எல்லாம் தாருமபுரியில்  உள்ள திமுக நிர்வாகிகள் அறிந்தும் மௌனமாய் இருக்கிறார்கள் என்பதை பார்த்தால்  DEO ராஜகோபால் மற்றும் தலைமையாசிரியர் செந்தமிழ்ச்செல்வி மீது நடவடிக்கை எடுக்க திராவிட அரசு பாயப்படுகிறதா ? என்று திமுகவில் உள்ள கூட்டணி கட்சிகள் சமூக வலைதளங்களில்   கிண்டலடித்து வருகின்றன்ர்.


Comments