பாப்பிரெட்டிப்பட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் கட்டுக்கட்டாக பணம் மறைத்து வைத்த சப் ரிஜிஸ்டர் இந்திரா ? Sub-Registrar Indira who secretly hid the money in the office of the registrar of Paprettipatti?
பாப்பிரெட்டிப்பட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் கட்டுக்கட்டாக பணம் மறைத்து வைத்த சப் ரிஜிஸ்டர் இந்திரா
பாப்பிரெட்டிப்பட்டி
சார்பதிபு அலுவலகத்திற்கு தினமும் 20 பேருக்கு மேல் பத்திர பதிவு செய்வதற்காக வருகின்றனர். இந்த அலுவலகத்தில் சமூக ஆர்வலர் தனது பட்டாவை பத்திர பதிவு செய்வது குறித்து பாப்பிரெட்டிப்பட்டி சார் பதிவாளர் அலுவலர் இந்திரா அவர்களிடம் விளக்கம் கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது சப் ரிஜிஸ்டர் இந்திரா அவர்களின் தனி அறையில் இருந்து ஒரு நபர் வெளியே வந்துள்ளார் பிறகு இந்திரா கையில் உடன் பணம் இருந்ததை கண்டு சமூக ஆர்வலர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார் அப்போது பைலுக்குள் பணத்தை மறைப்பது,ம் வீடியோவில் பதிவாகியுள்ளது. இது பற்றி அவரிடம் கேட்கும் பொழுது இது என்னுடைய சொந்த பணம் இதை கேட்பதற்கு உங்களுக்கு தேவையில்லாதது என்று விவாதம் வைத்துள்ளார். அவருடைய சொந்த பணமாக இருந்திருந்தால் ஏன் டேபிள் மீது உள்ள பைலுக்கு அடியில் மறைத்து வைக்க வேண்டும் அப்படி சொந்த பணமாக இருந்திருந்தால் கட்டுக்கட்டாக சார் பதிவாளர் அலுவலகத்திற்கு பணங்களை கொண்டு வரலாமா ? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர் இவர் ஏற்கனவே சேலம் மாவட்டம் சூரமங்கலத்தில் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. சப் ரிஜிஸ்டர் இந்திரா அவர்கள் ஏற்கணவே லஞ்சம் அதிகமாக வாங்குகிறார் என்று பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் இவரை இடம் மாற்றம் செய்ய கோரி போஸ்டர் ஒட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இவர் மீது புகார் கொடுத்தால் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை என்கின்றனர்.
Comments
Post a Comment