கோர்ட் உத்தரவு இருந்தும் வழித்தடம் விடாமல் மிரட்டும் பொம்பிடி அரசியல் வில்லன்

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பொம்மிடி காவல் நிலைய சரகம் கிருஷ்ண கவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி வயது 67 வன்னியர் தகப்பனார் பெயர் முத்து இவரது மனைவி மரகதம் வயசு 62 மற்றும் மகன்கள் நடராஜ் வயது 42 தகப்பனார் பெயர் கந்தசாமி குமார் வயது 40 தகப்பனார் பெயர் கந்தசாமி குமாரின் திருமதி கோகிலா 34 நடராஜன் மனைவி அய்யம்மாள் வயது 36 மற்றும் நடராஜன் மூத்த மகன் சந்திரகுமார் வயது 16 இவர் முத்தம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார் மற்றும் குமாரின் மகன்கள் ஆன கீத்த பிரியன் வயது 11 ஆம் வகுப்பு கிரீன் பார்க் பள்ளியிலும் சபரி வயது 9 நான்காம் வகுப்பு கிரீன் பார்க் பள்ளியிலும் விக்னேஸ்வரன் வயது 5 கிரீன் பார்க் பள்ளியிலும் படித்து வருகின்றனர் மேற்படி இவர்கள் தங்களுடைய சொந்த இடத்தில் வீடு கட்டி வசித்து வருகின்றனர் இவர்கள் வீட்டிற்கு செல்லும் பாதையில் சேகர் வயது 56 லம்பாடி தகப்பனார் பெயர் பழனி ஆவார் இவருடைய நிலம் கருங்குளூர் முதல் முத்தம்பட்டி செல்லும் சாலையில் அமைந்துள்ளது இந்த நிலத்திற்கு கடந்த 17 -9-2022 ஆம் தேதி சேகர் அவர்கள் முள்வேலி அமைக்கும் பொழுது தடுத்து இருக்கிறார்கள் இதற்காக கோகிலா மற்றும் அய்யம்பாளை அவர்கள் தாக்கியதாக பொம்மிடி காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்படும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தினாலும் தர்மபுரி சிவில் நீதிமன்றத்தில் இது சம்பந்தமாக 2002 ஆம் ஆண்டு சேகர் தனக்கு சொந்தமான இடம் என்று வழக்கு போட்டு உள்ளார்.  ஆனால் தீர்ப்பானது மேற்படி கந்தசாமிக்கு சாதகமாக  வந்துள்ளது இருந்த போதிலும் இன்னும் வழித்தடம்  விடாத காரணத்தினால் இன்று 10 45 மணிக்கு மேற்படி கந்தசாமி வகையறா 5 லிட்டர் மண்ணெண்ணெய் கேனை எடுத்து வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்திற்கு முன்பு குமார் மற்றும் நடராஜ் மீது ஊற்றிக் கொண்டனர் அங்கிருந்த காவல்துறையினரும் தீயணைப்புத்துறையினரும் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி அவர்களை மீட்டனர். இது குறித்த மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார் 

Comments