RSS ஆதிக்கத்தில் தருமபுரி CEO-DEO ! மாவட்ட ஆட்சியர் | பள்ளி கல்வித்துறை அமைச்சர் மௌனம் ? திமுக தொண்டர்கள் அதிர்ச்சி !

தருமபுரி நகரபகுதியான இலக்கியம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 600 மாணவர்கள் படித்துவருகின்றனர். இந்த பள்ளிகூடத்தில் சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளின் புகைபடம் இல்லை, பள்ளிகூடத்தின் தலைமையாசிரியரின் அறைக்குள்  

RSS  அமைப்பின் பாரதமாதா புகைப்படம் மட்டும் இடம்பெற்றுள்ளதை நினைத்து  திமுக தொண்டர்கள் கூட்டணி கட்சிகள் சமூக ஆர்வலர்கள் இது தருமபுரி தருமபுரி மாவட்டத்திற்கு ஒரு தலைகுனிவான செயல் என்கின்றனர்.

மாணவர்களின் வாழ்கையில் மட்டுமில்லை சமூக வாழ்விலும் கல்வி என்பது உயிருக்கு மேலானது. அப்படிப்பட்ட கல்வியை ஊக்கபடுத்துவதில் ஆசிரியர்களுக்கு மிகபெரிய பங்கு உண்டு. ஆனால் அந்த ஆசிரியர்கள் ஒரு சமூகம் சார்ந்து, ஒரு மதம் சார்ந்த அடையாளம் வைத்து மாணவர்களிடம் கல்வியை கொண்டு சேர்த்தால் அவர்களுடைய மனதில் ஒரு போதும் சமத்துவமான சிந்தனைகள் உருவாகபோவதில்லை.
நமது இந்திய சுதந்திரத்திற்காக போராடிய மகாத்மா காந்தியை சுற்றுகொண்ட கோட்சேவின் அமைப்பான 
RSS வகுப்பறைக்கு சென்று வந்ததாக சித்ரா என்ற ஆசிரியர் சமூக ஆர்வலரிடம் பேசிய ஆடியோ சமூவளைதலங்களில் மிகபெருமளவில் பரவியது, இச்சம்பவம் பேசும் பொருளாக மாறியது.

கடந்த செப்டம்பர் ஆம் தேதி இலக்கியம்பட்டி  அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் தமிழ்செல்வி பள்ளி வேலை நேரத்தில் சக ஆசிரியர்களை வைத்து தருமபுரி மலபார் கோல்டு நிறுவன மேலாளருடன் கேக் வெட்டி கொண்டாடியத்தில் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. மாவட்ட ஆட்சியர் இது குறித்து எந்த ஒரு நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை என தருமபுரி திமுக நிர்வாகிகள் தலைமைக்கு தகவல் கொடுத்தாலும் பள்ளி கல்வித்துறை அமைசர் என்ன செய்கிறார் என்ற கேள்வி சக கூட்டணி கட்சி தொண்டர்கள் கடுப்பில் உள்ளனர்.

இதுவரையில் அந்த ஆசிரியர் மீது மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் அந்த ஆசியருக்கு ஆதரவாக செயல்படுவது திமுக தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதற்கான முழுமையான காரணத்தை நமது குழு ஆய்வு செய்ததில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் மற்றும் மாவட்ட துணை கல்வி அலுவலர் ராஜகோபால் அவர்கள் சேர்ந்துதான் ஆர் எஸ் எஸ் அமைப்பின் முக்கிய அடையாளமான பாரதமாதா புகைப்படத்தை தலைமையாசிரியர் அவர்களுடன் வேறொரு பள்ளிகூடத்தில் பணியாற்றும்  துரைசாமி , ஆசிரியர் சித்ரா  வழங்கியதை பெற்றனர், 

என்பது மிக கொடுமையான சம்பவமாக உள்ளது. தலமையாசிரியர் அவர்களுக்குத்தான் சுதந்திர தியாகிகளின் புகைப்படம் வைக்க மனமில்லை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்க்ளுக்குமா அந்த சிந்தனை இல்லை இப்படிப்பட்ட அதிகாரிகளும், ஆசிரியர்களும் இருந்தால் மாணவர்களுக்கு நமது நாட்டின் சுதந்திர தியாகிகளின் வரலாறு எப்படி தெரிய வரும் ? ஒருவேளை தலைமையாசிரியர் அறையில் வைக்கப்பட்ட ஆர் எஸ் எஸ் அமைப்பின் பாரத மாதா மற்றும் ஆர் எஸ் எஸ் தான் சுதந்திரம் பெற்று கொடுத்தார்கள் என்று வரலாற்றையே மாற்றிகூட இவர்களால் பாடம் எடுக்க முடியும், இல்லை அந்த புகைப்படத்தை பார்த்து மாணவர்களே புரிந்து கொள்வதற்காக வைகபட்டதா ? என்ற கேள்வி எழுந்துள்ளது.
  
சுதந்திர தியாகிகளின் புகைப்படம் இல்லை

கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் புகைப்படம் இல்லைஅனைத்து சமூகமும் படிக்கவேண்டும் என சட்டம் இயற்றிய டாக்டர் அம்பேத்கர் புகைப்படம் இல்லைபாரதியார் புகைப்படம் இல்லைஆசிரியர் தினமாக கொண்டாடப்படும் இராதாகிருஷ்ணன் புகைப்படம் இல்லைஆனால் ஆர் எஸ் எஸ் சைசார்ந்த நபர்கள்  வழங்கிய பாரத மாத புகைப்படம் மட்டும் தலைமை ஆசிரியர் அறையில் வைத்துள்ளனர்.
தலைமையாசிரியர் தமிழ்ச்செல்வி மேல் வால்மையே வெல்லும் என்று இதேம்பெற்றுள்ளது. ஆனால் மகாத்மா காந்தியின் புகைப்பட எடுக்கப்பட்டுள்ளது.
    அப்படிஎன்றால் அப்பள்ளியின் தலைமையாசிரியர் செய்யும் செயலுக்கும்அங்கே நடக்கும் தவறுகளுக்கும் CEO குணசேகரன்  DEO ராஜகோபால் அவர்களுக்கும்  நூறு சதவீதம் தொடர்பு இருப்பதை  அந்த பள்ளியில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளும் உணரவைக்கின்றது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி கூட இது வரையில் திமுக அரசு மற்றும் பள்ளி கல்வி துறை அமைச்சர் மௌனம் காப்பது ஒரு வேலை இவர்களும்  ஒன்றிய அரசோடு இணக்கமாக உள்ளார்களா என்ற சந்தேகத்தில் தற்போது திமுக தொண்டர்கள் பாஜகாவில் இனைந்து வருகின்றனர். இணைந்தவர்கள்  யாவரும் இலக்கியமப்ட்டி அரசு பள்ளியில் உள்ள  மாணவர்களின் பெற்றோர்கள் என கூறபடுகிறது. இச்சம்பவம் அனைத்தும் இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் RSS அமைப்பை சேர்ந்த ஆசிரியர்களால் மூளை சலவை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது. அப்பள்ளியில் மாணவர்களிடம் ஆசிர்யர்கள் பரப்பும்  ஆழமான பழமொழி நாம எல்லாம் ஒரே சாதி  நாம ஒன்றாக இருப்போம் ஒன்றாய் பயணிப்போம், என மாணவர்களை இப்போதிருந்தே  கைவசபடுதுகின்றன என்பது சமூக ஆர்வலர்கள் வேதனையோடு புலம்புகின்றனர்..

Comments