பென்னாகரம் சுற்று வட்டார பகுதிகளில் அரசு பள்ளியில் அழுகிய முட்டைகள் ஆசிரியர்கள் மாணவர்கள் அதிர்ச்சி..!!!

 

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியம் மற்றும் ஏரியூர் ஒன்றியம் ஆயிரம் பகுதிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட அரசு பள்ளியில் இயங்கி வருகின்றன இந்த பள்ளிக்கு தமிழ்நாடு சொசைட்டி நிறுவனம் சார்பில் தமிழகம் முழுவதும் இந்நிறுவனம் அரசு பள்ளிகளுக்கு நாமக்கல்  முட்டை விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நான்கு மண்டலங்களாக பிரித்து நாமக்கல் திருச்செங்கோடு ஈரோடு சேலம் தருமபுரி கிருஷ்ணகிரி மாவட்டங்கள் ஒரு மண்டலங்களாக முட்டை வினியோகம்  செய்து வருகின்றனர்.கடந்த பத்து நாட்களாக அரசு பள்ளிகளில் அழுகிய முட்டைகள் மற்றும் துர்நாற்றத்துடன் கூடிய முட்டைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆசிரியர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் பாப்பாரப்பட்டி பிக்கிலி, புதுக்கரும்பு, மாங்கரை,கருபனம்பட்டி, மாக்கனூர், பெரும்பாலை, அருகே உள்ள ஆலமரத்தூர்  புதூர் நாகமரை ஏரியூர் ஆகிய அரசு நடுநிலைப் பள்ளிகளிலும் அரசு உயர்நிலைப் பள்ளிகளையும் மதிய உணவில் அழுகிய முட்டை துர்நாற்றத்துடன் பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டது இதை அதிர்ச்சடைந்த பெற்றோர்கள் அதிகாரிகளிடம் பலமுறை தகவல் அளித்தும் பலன் இல்லை என குற்றம் சாட்டி வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்கும் பொழுது  முட்டை டெண்டர் எடுத்தவர்கள்  இரண்டு நாட்களில் டெண்டர் முடியும் என்பதால் இது போன்ற தரமற்ற முட்டைகளை விநியோகம் செய்து வருகின்றனர். குழந்தைகளின் உயிரோடு விளையாடும் முட்டை நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் சமூக ஆர்வலர் கோரிக்கை விடுக்கின்றனர். மேலும் முறையான மாணவர்களுக்கு முட்டை வழங்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments