சரக்கு வச்சிருக்கேன் கொஞ்சம் மறைச்சி வச்சிருக்கேன் ! மாவட்ட ஆட்சியர் உத்தரவை மீறி தருமபுரி பாளையம் புதூரில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுபான விற்பனை செய்த தாபா கடை ! "முடிஞ்சா போலீஸ் வரட்டும்" கெத்தா நிற்கும்


தருமபுரி மாவட்டம் பாளையம் புதூரில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மார்க் கடை விடுமுறையால்  தாபாவில் களைகட்டிய மதுபான விற்பனை கண்டுகொள்ளாத காவல்துறை  


நாடு முழுவதும் இன்று காந்தி ஜெயந்தி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அரசு மதுபான கடைகள் மற்றும் மதுபான கூடங்கள் செயல்படுவதற்கு அனுமதி இல்லை என தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி  அறிவித்திருந்தார். 

ஆனால் மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்த அறிவிப்பை எல்லாம் காற்றில் பறக்கவிட்டு தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அரசு டாஸ்மாக் கடை இல்லை என்றதும் சந்து கடைகள் மற்றும் தாபாக்களில் மதுபான விற்பனை களை கட்டியது. இதற்கு. தருமபுரி மாவட்ட காவல்துறையினரும் கண்டும் காணாமல் பாராமுகம் காட்டி வருகின்றனர். 


குறிப்பாக சேலம் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பாளையம்புதூரில் செயல்படும் தனியாருக்கு சொந்தமான தாபா ஒன்றில் மதுபான விற்பனையும் மது பிரியார்களுக்கான சைடிஸ்கள் விற்பனையும் அனல் பறக்க நடந்து கொண்டிருந்தது. மது பிரியர்களின் வசதிக்கும் சவுகரித்துக்கும் ஏற்ப சற்றும் சளைக்காமல் ஃப்ரிட்ஜில் வைத்த கூலிங் பீருடன் மட்டன் சிக்கன் உள்ளிட்டவற்றோடு ஒவ்வொரு அறைகளுக்கும் தாராளமாக பரிமாறப்பட்டு வந்தது. 

அரசு மதுபான கடைகளில் கிடைக்கும் மதுபான வகைகளை விட இவர்களிடம் அனைத்து வகையான மது வகைகளும் கிடைக்கின்றது. மற்ற நாட்களிலும் அதிகாலை முதல் நள்ளிரவு வரை தாராளமாக நடைபெறும் விற்பனையால் பல மது பிரியர்கள் டாஸ்மார்க் கடையை திரும்பி கூட பார்ப்பதில்லையாம். மேலும் இந்த தாபாவின் எதிரில் தேசிய நெடுஞ்சாலை இருப்பதால் அளவுக்கு அளவுக்கு அதிகமாக மது அருந்தி விட்டு வரும் நபர்களால் விபத்துகளும் அவ்வப்போது ஏற்பட்டு வருகின்றன. மாவட்ட நிர்வாகம் மதுபான விற்பனை குறித்த அறிவிப்பை வெளியிட்டும் அந்த அறிவிப்பை எல்லாம் காற்றில் பறக்க விட்டு சர்வ சாதாரணமாக விற்பனை செய்து வருகின்றனர். 

இந்த சட்டவிரோத மதுபான விற்பனை குறித்து தொப்பூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் கண்டும் காணாமல் இருந்துவிட்டனர். காந்தி ஜெயந்தி தினத்தில் சட்டவிரோத மது விற்பனையை தடுக்க வேண்டிய காவல்துறையினர் மெத்தன போக்குடன்  தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பை சிறிதளவும் மதிக்காமல் செயல்பட்டு வருகின்றனர். சட்டவிரோத விற்பனையை தடுக்க வேண்டிய காவல்துறை இதற்கு ஆதரவு கொடுத்து வருவதால் கள்ள மதுபானம் முதல் சட்டவிரோத செயல்கள் வரை அனைத்தும் நாளுக்கு நாள் அதிகரிக்கத் தான் கூடும் என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது.

Comments