சென்னை காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் 32 பேர் கைது

சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், கடந்த 7 நாட்கள் சிறப்பு சோதனை மேற்கொண்டு, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் வைத்திருந்தது மற்றும் விற்பனை செய்தது தொடர்பாக 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 32 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். மேலும் 43 கிலோ 71 கிராம் கஞ்சா, 5 கிராம் ஹெராயின், ரொக்கம்  ரூ.40,000-, 1 செல்போன் மற்றும் 7 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

 
சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால்,  “போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள உத்தரவிட்டதன்பேரில், கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின்பேரில், துணை ஆணையாளர்கள் கண்காணிப்பில், உதவி ஆணையாளர்கள் மேற்பார்வையில். காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தங்களது காவல் நிலைய எல்லைகளில் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
 
இதன் தொடர்ச்சியாக காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 14.10.2022 முதல் 20.10.2022 வரையிலான 7 நாட்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, கஞ்சா உள்பட போதை பொருட்கள் கடத்தி வருதல் மற்றும் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 32 குற்றவாளிகள் கைது. 43 கிலோ 71 கிராம் கஞ்சா, 5 கிராம் ஹெராயின், ரொக்கம். ரூ.40,000/- 1 செல்போன் மற்றும் 7 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    
இதில் குறிப்பிடும்படியாக, K-3 அமைந்தகரை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் கடந்த 15.10.2022 காலை, அமைந்தகரை, ஷெனாய் நகர், மெட்ரோ ரயில் நிலைய பின்புறம் கண்காணித்து சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த 1.பிரகாஷ் (எ) பாம்பு பிரகாஷ், வ/25, த/பெ.கணபதி, Q பிளாக், எழில்நகர், பெரும்பாக்கம், சென்னை, 2.விஜய், வ/22, த/பெ.சுவாமிநாதன், சேமாத்தம்மன் நகர், கோயம்பேடு, 3.ஆகாஷ்குமார், வ/25,த/பெ.மூர்த்தி, T பிளாக், எழில்நகர், பெரும்பாக்கம் ஆகிய 3 நபர்களை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 1.8 கிலோ கஞ்சா மற்றும் 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.  இதனை தொடர்ந்து, K-3 அமைந்தகரை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் அமைந்தகரை, மேத்தா நகர் மெயின் ரோட்டிலுள்ள காலி மைதானத்தில் கண்காணித்து, அங்கு ரகசியமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த 4.பிரேம் (எ) தமிழ்வாணன், வ/22, த/பெ.ராஜ்குமார், VGP அமுதாநகர், மதுரவாயல், 5.யூசுப், வ/27, த/பெ.முன்னூர் பாஷா, F பிளாக், கே.பி.பார்க், புளியந்தோப்பு ஆகிய 2 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1.2 கிலோ கஞ்சா மற்றும் 1 டியோ இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
     
P-2 ஓட்டேரி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் கடந்த 16.10.2022 பெரம்பூர், மங்களபுரம், ஆட்டோ ஸ்டாண்டு அருகில் கண்காணித்து  சட்டவிரோதமாக கஞ்சா எடுத்து வந்த கல்யாணசுந்தரம், வ/26, த/பெ.ஐயப்பன், வீரய்யா காம்பவுண்டு, ஆளவந்தான், மதுரை மாவட்டம் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 5 கிலோ கஞ்சா மற்றும் 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

E-2 இராயப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் கடந்த 16.10.2022 இராயப்பேட்டை பகுதியில்  கண்காணித்து  சட்டவிரோதமாக கஞ்சா  விற்பனை செய்த அப்துல்காபர், வ/45, த/பெ.அப்துல்சர்கார், எண்.1 உசேன் அலிகான் தெரு, இராயப்பேட்டை, சென்னை 2.முன்வர்மியான், வ/45, த/பெ.கஷஷ்மியான், எண்.21, குப்புசாமி தெரு, அம்பேத்கர் நகர், இராயப்பேட்டை, சென்னை ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 10 கிலோ கஞ்சா , ரொக்கம் ரூ.40,000/- மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

K-11 CMBT காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் கடந்த 18.10.2022 காலை, கோயம்பேடு, ஜெய்நகர் பூங்கா அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியே வந்த நபரை நிறுத்தி விசாரணை செய்தபோது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார். சந்தேகத்தின்பேரில், அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் பெருமளவு கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.அதன்பேரில், சட்டவிரோதமாக கஞ்சா எடுத்து வந்த பப்பி பிஸ்வாஸ், வ/24, த/பெ.சுகுமார் பிஸ்வாஸ், திரிபுரா மாநிலம் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
     
மேலும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களின் உத்தரவின்  பேரில் கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின்பேரில், காவல் துணை ஆணையாளர்கள் மேற்பார்வையில், உதவி ஆணையாளர்கள் தலைமையில், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் ஆளிநர்கள் அடங்கிய காவல் குழுவினர், தீவிர விசாரணை மற்றும் தனிக்கவனம் செலுத்தி கடந்த 2021 மற்றும் 2022 ஆண்டுகளில் இதுவரை, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 623 வழக்குகளில் சம்பந்தப்பட்ட 1,424 குற்றவாளிகளின் சொத்து மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் சேகரித்து, சட்டரீதியாக முடக்கும் பணி தீவிரபடுத்தப்பட்டு இதுவரையில் மொத்தம் 772 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.
        
சென்னை பெருநகர காவல்துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால்,  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Comments