தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரத்திற்கு மேற்பட்ட புற நோயாளிகள் வந்து செல்கின்றனர் 500க்கும் மேற்பட்ட படுக்கை அறை வசதி உள்ளது.
மாதம் சுமார் 500 முதல் 1000 வரை பிரசவங்கள் நடைபெறுகின்றனர்.
தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவிக்கு பேராசிரியர் சதீஷ்குமார் என்பவர் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக புகார் வந்துள்ளது. இதுபோன்ற அநீதியான செயல்கள் பலமுறை நடந்ததாக தகவல்கள் வெளியான நிலையேல்
தர்மபுரி அரசு மருத்துவமனை மற்றும் மக்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியும் பரபரப்பியும் ஏற்படுத்தி உள்ளது.
தர்மபுரி அரசு மருத்துவமனை கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருபவர் சரண்யா பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இவர் கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி மருத்துவக் கல்லூரி முதல்வர் டீன் அமுதவல்லியிடம் பாதிக்கப்பட்ட மாணவர்கள் சென்று பேராசிரியர் சதீஷ் தன்னிடம் பாலியல் ரீதியாக தவறான முறையில் நடந்து கொள்ள முயற்சி செய்ததாக புகார் மனு ஒன்றை அளிக்கிறார்.
உடனடியாக விசாரணை நடத்தாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார் மருத்துவ கல்லூரி டீன் அமுதவல்லி.
இதனால் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பேராசிரியர் சதீஷ்குமார் மாணவிகளிடம் எல்லை மீறி தவறான நோக்கத்தோடு நடந்து கொள்கிறார்.
இதனாலையே நாங்கள் அனைவரும் அவரின் வகுப்புகளை புறக்கணிக்க வந்ததாக தகவல் கொடுத்துள்ளனர்.
செப்டம்பர் இரண்டாம் தேதி 3 மருத்துவ பேராசிரியர்கள் அடங்கிய குழுவை அமைத்து விசாரணைக்கு உத்தரவிடுகின்றார் டீன் அமுதவல்லி.
மருத்துவக் கல்லூரியின் அமுதவல்லி விசாரணை முழுமையாக செய்த மருத்துவர் குழுவிற்கு எங்கிருந்தோ வந்த அரசியல் அழுத்தத்தால் மாணவ மாணவிகள் குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளை எல்லாம் பதிவு செய்யாமல் முன்பே டைப் செய்யப்பட்ட காகிதத்தில் கையெழுத்திட்டு செல்லும்படி மிரட்டியுள்ளனர்.
நாங்கள் குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் ஒன்று கூட இதில் இல்லை நாங்கள் எப்படி கையெழுத்து இட முடியும் என்று எதிர்ப்பு தெரிவித்து விசாரணை குழுவை விட்டு மாணவர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
அதன் பிறகு தனித்தனியாக மாணவர்களை அழைத்து உங்களுடைய எதிர்காலம் எங்கள் கையில் உள்ளது உங்கள் எதிர்காலத்தை நினைத்துப் பாருங்கள் இதுபோல நடவடிக்கைகளில் ஈடுபட்டால் உங்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என்று மறைமுகமாகவும் நேரடியாகவும் மிரட்டி வந்துள்ளனர்.
என்று பாதிக்கப்பட்ட மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். சம்பந்தப்பட்ட மருத்துவர் சதீஷ்குமாரை காப்பாற்ற கட்சி பாகுபாடு இன்றி அவரது சமூகத்தைச் சேர்ந்த முக்கிய அரசியல் பிரமுகர்கள் அனைவரும் கடும் முயற்சி செய்து வருவதால் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு நீதி கிடைக்காமல் போகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
உரிய விசாரணை மேற்கொண்டால் மருத்துவர் சதீஷ்குமாரின் பல லீலைகள் வெளிச்சத்திற்கு வரும் என்கின்றனர் அது மட்டும் இல்லாமல் பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் இவரால் ஒரு குடும்ப வாழ்க்கையை சீரழிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இது பற்றி டீன் அமுதவல்லியிடம் கேட்ட போது நாங்கள் அதற்கான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றோம், அவரை இடமாற்றம் செய்தியுள்ளோம். அதுமட்டுமில்லாமல் பத்திரிக்கையாளர்கள் எங்களை மிரட்டுகிறார்கள் என்று கூறினார். ஓகே மேம் நாங்களும் உங்களோடு பேசுகிறோம் மிரட்டுகிற மாதிரி தெரிகிறதா என்று கேட்டதற்கு ஐ.. அய்யோ.. உங்களை இல்லை பொதுவாக சொன்னேன் என்று தனது பேச்சை நிறுத்தி விட்டார்.
தர்மபுரி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மாணவர்களின் குற்றச்சாட்டிற்கு பதில் தேடி மருத்துவ சதீஷ்குமாரை தொடர்பு கொண்ட போது மருத்துவம் தொடர்பாக மாணவர்களுக்கு பாடம் எடுத்ததை தவறாக எடுத்துக் கொண்டு குற்றம் சாட்டை செய்கிறார்கள் இது தொடர்பாக விசாரணை நடந்து முடிந்துள்ளது எனக்கு 54 வயதாகிறது அப்படிப்பட்ட செயலில் ஈடுபட எனக்கு எந்த ஒரு விருப்பமும் கிடையாது தவறான நோக்கத்தில் நான் நடந்து கொள்ளவில்லை என்று மாணவிகளின் குற்றச்சாட்டுகளை மறுத்து பேசுகிறார் பேராசிரியர் சதீஷ்குமார்..
Comments
Post a Comment