ராகுல் தலைவராக வருவது பாஜவுக்கு நல்லது: அண்ணாமலை பேட்டி

காரைக்குடி: பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, சிவகங்கை மாவட்டம், காரைக்குடிக்கு நேற்று வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை என இந்தியாவை இணைப்பதற்காக இந்த யாத்திரை என கூறுகிறார். யாத்திரையில் செல்லும் போது நமது இந்தியா மோடி தலைமையில் எந்த அளவுக்கு இணைந்துள்ளது என அவருக்கு தெரியும். காஷ்மீர் முழுமையாக இந்தியாவுடன் இணைந்துள்ளது. வடகிழக்கு மாநிலங்கள் முழுமையாக இணைந்துள்ளன. ராகுல்காந்தி யாத்திரையில் செல்லும் போது பார்த்துக் கொண்டே செல்வார்.


காங்
கிரஸ் கட்சியின் பேச்சு வேறு. செயல் வேறு. காங்கிரஸ் கட்சி மக்கள் செல்வாக்கு இல்லாத கட்சி. அடுத்த தலைவராக ராகுல் காந்திதான்  வருவார் என அனைவருக்கும் தெரியும். அதற்காகத்தான் இந்த பாதயாத்திரை. காங்கிரஸ் கட்சியில் எந்தவிதமான ஜனநாயகமும் இல்லை. மறுபடியும் ராகுல்காந்தியை தலைவராக கொண்டு வர நடத்தக்கூடிய நாடகம். ராகுல்காந்தி தலைவராக வருவது காங்கிரஸ் கட்சிக்கு நல்லதாக இருக்கலாம், அது நிச்சயம் பாஜவுக்கும் நல்லது. அவர் வந்தால் பாஜக 450 எம்பிக்களை பெற்று ஆட்சியில் அமரும்’’ என்றார்.

Comments