தற்போதுள்ள மாவட்ட செயலாளர்களால் கட்சியை வளர்க்க முடியாது - இதுதான் முடிவு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் - தளபதி சிக்னல் !

திமுக உட்கட்சி தேர்தல் மும்முரம்

திமுகவில் பேரூர், ஒன்றியம், ஊராட்சி, மாவட்டம் என பொறுப்பாளர்களை தேர்வு செய்ய உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. ஒன்றிய அளவிலான பொறுப்புகளுக்கு 95 விழுக்காடு தேர்தல் நடந்து முடிந்துள்ளது. ஒன்றிய செயலாளர், அவைத்தலைவர், பொருளாளர் ஆகிய பொறுப்பாளர்கள் விபரம் அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி மூலம் அறிவிக்கப்பட்டுவிட்டது. ஏற்கனவே இருந்த நிர்வாகிகளில் பெரிய மாற்றம் இல்லை. ஒரு சில இடங்களில் தொண்டர்கள் மத்தியில் அதிருப்தி இருந்தாலும், தலைமை முடிவு என அமைதியாக ஏற்றுக்கொண்டதாக தகவல் 

கடந்த சட்டமன்ற தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில் சரியாக வேலை செய்யாமல் கோட்டை விட்ட மாவட்ட செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க தலைமை முடிவு செய்து அதற்கான பட்டியல் ஒன்றை தயாரித்து வைத்துள்ளதாகவும்,அதன் அடிப்படையில் தருமபுரி, தென்காசி, நெல்லை, கோவை மாவட்டங்களில் மாவட்ட செயலாளர்கள் மாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இம்மாத இறுதிக்குள் மாவட்ட செயலாளர் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் மாற்றம் தொடர்பான அறிவிப்பு வெளியிட வாய்ப்புள்ளது.

இது பற்றி திமுக நிர்வாகிகளிடம் கேட்கும்ம்போது சமூகவலதலங்களில் தவறான செய்ததிகள் இதுபோல வருகிறது, இது முழுக்க முழுக்க வதந்திகள் மாவட்ட செயலாளர் பொறுப்புகள் குறித்து தலைமை இன்னும் எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை என்கின்றனர்.

புதிய மாவட்ட செயலாளர்கள் மாற்றம் பட்டியலில் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் பெயர் முதலில் இருப்பதாக கூறப்படுகிறது. தருமபுரி மாவட்டத்தில் பிரபலமான முகமாக உள்ள பழனியப்பனுக்கு மாவட்ட பொறுப்பு வழக்குவதன் மூலம் அங்கு திமுகவை வலுவான நிலைக்கு கொண்டுச் செல்ல முடியும் என தலைமை நினைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பழனியப்பனுக்கு வரவேற்பு!


அப்போது பேசிய அவர் “நீங்கள் கூறுவது போல் தலைமை அப்படி ஒரு முடிவு எடுத்தால் தருமபுரிக்கு நல்ல விடிவு காலம் என நினைக்கிறேன். தற்போதுள்ள மாவட்ட செயலாளர்களால் கட்சியை வளர்க்க முடியாது. தருமபுரி திமுகவில் மாற்றம் தேவை, பழனியப்பன் மாவட்ட முழுவதும் பரிட்சயம் ஆன நபர். அவரை மாவட்ட பொறுப்புக்கு கொண்டுவருவதில் தவறில்லை” இவ்வாறு கூறினார்.

பழனியப்பனுக்கு உள்ள சவால்கள்

பழனியப்பன் தருமபுரியில் பரிட்சயம் சார்ந்த நபர் என்றாலும், சமூக அடிப்படையில் அவர் கொங்கு சமூகத்தை சார்ந்தவர். அதனால், பெரும்பான்மை சமூகமான வன்னியர் சமூகத்தை சேர்ந்தவரையோ அல்லது கட்சியில் நீண்ட காலமாக உழைக்கும் நபரையோ மாவட்ட செயலாளர் பொறுப்புக்கு கொண்டுவர வேண்டும் என உடன் பிறப்புகள் கருதிகின்றனர்.

மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பாணியில் பழனியப்பன் செயல்படுவார் என்று தலைமை நம்புவதாக தெரிகிறது. கரூர், கோவையை திமுகவின் கோட்டையாக மாற்றும் அசைன்மெண்டை செந்தில் பாலாஜி சிறப்பாக செய்து வருகிறார். அதே பாணியில் பழனியப்பனும் பல்வேறு திட்டங்களை வைத்துள்ளதாக தெரிகிறது. இதனால் அவர் மீது அதீத நம்பிக்கை வைத்துள்ள தலைமை மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கி கவுரவிக்க திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன


Comments