பழனியில் அரசு விடுதியில் தங்கியிருக்கும் மாணவிகளுக்கு பாலியல் அத்துமீறல் ஈடுபட்ட ஐந்து நபர்களை காவல்துறை கைது செய்யப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இயங்கிவரும் அரசு விடுதியில் தங்கியிருக்கும் மாணவிகளுக்கு பாலியல் அத்துமீறல் ஈடுபட்ட ஐந்து நபர்களை காவல்துறை கைது செய்யப்பட்டுள்ளனர்.
 பழனி சத்யா நகரில் இயங்கிவரும் அரசு ஆதிதிராவிடர் மாணவிகள் விடுதியில் அரசு பெண்கள் மேல் நிலை பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் இந்த விடுதியில் தங்கியிருந்து படித்து வருகின்றனர் இந்நிலையில்  கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பு நல துறை சார்பில் விழிப்புணர்வு நடைபெற்றது அப்போது குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் எங்களைத் தொடர்பு கொள்ளலாம் என்று அதிகாரிகள் தொடர்பு எண்களை தெரிவித்திருந்தனர் சில மாணவிகள் அந்த எண்களை தொடர்பு கொண்டு சில பெண்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் மாவட்ட குழந்தைகள் பெண்கள் பாதுகாப்பு அதிகாரிகள் பரணி சத்யா நகரில் இயங்கிவரும் ஆதிதிராவிடர் விடுதியில் பெண்களிடமும்  விசாரணை செய்தனர் அப்போது விடுதியில் தங்கியிருந்த சில மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்தது இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததன் பேரில் பழனி   அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பரணி சத்தியா நகரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் உட்பட 5 நபர்களை காவல்துறை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். மற்றும் விடுதி பாதுகாவலர்  அமுதா,  விஜயா ஆகியோரை தற்காலிக பணியிடம் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Comments