வதந்திகளை பரப்பாமல் மக்களுக்கு தேவையானதை எழுதுங்கள் – தர்மபுரி திமுக நிர்வாகிகள் கோரிக்கை !

evidenceparvai.in
தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் திமுக மாவட்ட செயலாளர்  பொறுப்புகள் மாற்ற  இருக்கும் நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் மாவட்டசெயலாளர்கள் மாற்ற இருக்கிறார்கள் என்று பலமுறை இணையதளங்களில்  வதந்திகள் பரவி வருகின்றன. பொறுப்புகள் குறித்து இதுவரை அதிகாரபூர்வமாக  தலைமை எந்த ஒரு அறிவிப்பு அறிவிக்கவில்லை.

 கட்சிக்குள் மாற்றங்கள் வந்தாலும் முன்னாள் இருந்த மாவட்ட பொறுப்பாளர்கள் , புதிதாக பொறுபேற்கும் மாவட்ட பொறுப்பாளர்கள் எந்த ஒரு காழ்புணர்ச்சியும் இல்லாமல் மனதில் ஈகோ எண்ணங்கள் இல்லாமல் ஒற்றுமையாக செயல்படுவோம் தருமபுரி மாவட்டத்தை திமுக கோட்டையாக மாற்றுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்பதை மறந்துவிடவேண்டாம்.

ஆகவே  தலைமை அறிவிக்கும் உண்மையான தகவல்களை நீங்கள் செய்திகளாக வெளியிடுங்கள் என்று செய்தியாளர்களுக்கும், இணையதள நண்பர்களுக்கும் திமுக நிர்வாகிகள் கோரிக்கை வைத்துள்ளனர். மற்றும் ஊடக நண்பர்கள் யாவரும் இணையதள செய்திகளை பரப்பாமல் மக்களுக்கு அடிப்படை தேவைகள் எங்கெங்கு நிறைவேற்றப்படவில்லை, என்றும் மக்களுடைய கோரிக்கைகளை அரசு அதிகாரிகள் நிறைவேற்றாமல் இருக்கிறார்களா?  என்பதை செய்தியாக வெளியிடுங்கள்,  ‘’தமிழக அரசு மக்களுக்கு தேவையானதை நிறைவேற்ற உதவியாக இருக்கும்’’  என்று கூறியுள்ளனர்.

 

Comments