தர்மபுரி மாவட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் பி எஸ் சரவணன் தலைமையில் திமுகவின் முப்பெரும் விழா வை கொண்டாடும் வகையில் பல்வேறு இடங்களில் திமுக கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. பொம்மிடி கடத்தூர் பாப்பிரெட்டிப்பட்டி மோலையனூர், மெணசி, போதகாடு, பையர்நத்தம், மருக்காலம்பட்டி, வாசி கவுண்டனூர், துரிஞ்சிப்பட்டி, B, பள்ளிப்பட்டி, உட்பட்ட 40 இடங்களுக்கு சென்று அண்ணார் சிலைக்கும் பெரியார் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினார் தர்மபுரி திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் சுப்பிரமணி.
அப்போது வாசி கவுண்டனார் பகுதியில் உள்ள கிராம பெண்கள், தடங்கம் சுப்பிரமணி அவர்களிடம், எங்களுக்கு கூடுதலாக ஒகேனக்கல் குடிநீர் வருவதில்லை.
மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கிறோம். தயவு செய்து எங்களுக்கு கூடுதலாக தண்ணீர் திறந்து விட உதவுங்கள் ஐயா என்று வாசி கவுண்டனூர் பகுதி பெண்கள் கேட்டவுடன், உடனடியாக தடங்கம் சுப்பிரமணி அவர்கள் , எதற்கு இப்படி கெஞ்சுகிறீர்கள் இது உங்களுடைய உரிமை சொன்னா செய்யப் போறேன் ஏன் இப்படி நீங்க எல்லாம் எனக்கு சொந்தம் நீங்க எதுவும் வருத்தப்படாதீங்க ஒரே நிமிடம் கூறுங்கள் என்று ஒகேனக்கல் கூட்டு குடிநீர் துறை சார்ந்த அதிகாரியை தொடர்பு கொண்டு இவர்களுக்கு கூடுதலாக குடிநீர் வழங்க வேண்டும் இவர்கள் மீண்டும் குடிநீர் வரவில்லை என்று எந்த ஒரு புகார் மீண்டும் எங்களிடம் கொடுக்காத வரை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்.
அதேபோல் பல்வேறு இடங்களில் இது போன்ற நிகழ்வுகள் இருந்தால் தயவு செய்து அதனை உடனே சரி படுத்துங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளார். தடங்கம் சுப்பிரமணி அவர்களின் கோரிக்கையை ஏற்று நாளை அவர்களுக்கு கூடுதலாக குடிநீர் திறக்கப்படும் என்று ஒகேனக்கல் கூட்டு குடிநீர் துறை அதிகாரி உறுதியளித்தார். இதனால் அப்பகுதி பெண்களும் மக்களும் மகிழ்ச்சி அடைந்து தடங்கம் சுப்பிரமணி அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
Comments
Post a Comment