மருத்துவ கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு - அமைச்சர் வைத்த செக் !

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை 

உதவி பேராசிரியர் தற்காலிக பணியிடை நீக்கம் 


தருமபுரி செப்-13,


தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உதவி பேராசிரியர் சதீஸ்குமார் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.


தருமபுரி அரசு மருத்துவ கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவிக்கு உதவி பேராசிரியர் மருத்துவர்  சதீஷ்குமார் என்பவர் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார்

பாதிக்கப்பட்ட மாணவி 

 கடந்த ஆகஸ்ட் 23ஆம் மருத்துவ கல்வி இயக்குனர் அவர்களுக்கும்  மருத்துவக் கல்லூரி  முதல்வர்  அமுதவல்லியிடம் பாதிக்கப்பட்ட மாணவி   பேராசிரியர் சதீஷ்மீது புகார் கொடுத்துள்ளார்.இந்த மனு மீது விசாரணை நடைபெற்று வந்தது 

இந்நிலையில் செப்டம்பர் 13 அன்று தருமபுரி மாவட்டத்திற்கு அரசு நிகழ்ச்சிகளுக்கு வருகைதந்த சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது 

தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மாணவி பாலியல் தொந்தரவு செய்வதாக அக்கல்லூரி உதவி பேராசிரியர் சதீஸ்குமார் மீது மருந்து கல்வி இயக்குநருக்கு புகார் அனுப்பியிருந்தார். இந்த மனுவை விசாரிக்க பேராசிரியர் மருத்துவர்கள் கண்மணி ,தண்டர்சிப்,காந்தி ஆகியோர் விசாரணை செய்தனர்.இதில் பாலியல் தொந்தரவு மாணவி கொடுக்கப்பட்டது உண்மை என தெரியவந்தது.

இதனையடுத்து உதவி பேராசிரியர் சதீஸ்குமார் மீது உடனடியாக தறகாலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது  பிறகு துரைரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Comments