தேனி மாவட்டம் கம்பம் நகரில் இருந்து கேரளா செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் ராணுவ வீரர் மற்றும் நாமக்கல் பகுதியைச் சேர்ந்த வாலிபர் உட்பட மூன்று பேர் பலி
மாவட்டம் கம்பம் நகரில் இருந்து கேரளா செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் ராணுவ வீரர் மற்றும் நாமக்கல் பகுதியைச் சேர்ந்த வாலிபர் உட்பட மூன்று பேர் பலி
தேனி மாவட்டம் கம்பம் நகரிருந்து குமுளி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சாமுண்டிபுரம் விளக்கு அருகே நாமக்கல் போத்தனூர் பகுதியைச் சேர்ந்த தங்கவேல் என்பவர் மகன் ராஜேஷ் குமார் தனது இருசக்கர வாகனத்தில் கூடலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே கம்பம் நோக்கி இரு சக்கர வாகனத்தில் வந்த கூடலூர் கன்னிகாளிபுரம் பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் தர்மராஜ் மற்றும் நண்பர் லியோ இருவரும் கம்பம் நோக்கி வந்த இரு சக்கர வாகனத்தில் எதிர்பாராத நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டது.விபத்தில் நாமக்கல்லைச் சேர்ந்த ராஜேஷ் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ராணுவ வீரர் தர்மராஜ் மற்றும் அவரது நண்பர் லியோ இருவரும் கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
மோட்டார் சைக்கிள் விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகின்றது.
தேனி மாவட்ட நிருபர் S. பாவா பக்ருதீன்
Comments
Post a Comment