60 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரும் இண்டூர் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நத்தம் புறம்போக்கு நிலத்தில் 60 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரும் எங்கள் பகுதியைச் சேர்ந்த 50 குடுமித்தனர்களுக்கு பட்டா வழங்க வேண்டி நல்லம்பள்ளி வட்டம் இந்தூர் கிராம சர்வே எண் 665 மற்றும் 698/2 உள்ள நத்தம் புறம்போக்கு நிலத்தில் 60 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வருகிறோம். அரசு நத்தம் புறம்போக்கு நிலத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து குடியிருந்து வந்தாலே அவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கலாம் என்று தமிழக அரசு மற்றும் நில நிர்வாக ஆணையர் அவர்களால் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது இந்நாள் வரை பட்டா வழங்கவில்லை. ஆகையால் உயர்திரு மாவட்ட ஆட்சியர் அவர்கள் இன்றூர் கிராமத்தில் உள்ள 60 ஆண்டுகளாக குடியிருந்து வரும் சுமார் 50 குடும்பத்தினர்களுக்கு பட்டா வழங்கி உத்தரவிட வேண்டுமாறு இண்டூர் கிராம மக்கள் மற்றும் மாரியப்பன் என்பவர் கொரிக்கை வைத்துள்ளனர்.

Comments