மக்களுக்கு சேவை செய்யணும்னு என்ன அவசியம் ? ஏன் திமுக தலைவர் கமிஷன் அடிக்கலையா ? கமிஷன் அடிச்சி சின்ன வீடு கட்டும் திப்பிரெட்டிஹள்ளி பஞ்,. தலைவர் சித்ரா
தர்மபுரி ஜில்லா ( யூனியன் ) உட்பட்டது திப்பிரெட்டிஹள்ளி இதில் 12 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். 12 வார்டு உறுப்பினர்கள் உண்டு, சித்ரா, என்பவர் தலைவராக உள்ளார். துணைத் தலைவராக அஸ்வினி ஆகியோர் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இந்த பஞ்சாயத்து நிர்வாகத்தில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணங்களால் தலைவர் சித்ரா மீது நம்பிக்கையில்லாத தீர்மானத்தை நிறைவேற்ற கோரி, சில கவுன்சிலர்கள் மனு கொடுத்துள்ளனர். காரணம் அடிக்கிற கமிஷன்ல ஆங்கங்கே சின்ன வீடு கட்டி வியாபாரம் செய்றாங்க என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. துணை தலைவர் அஸ்வினையை பதிவி நீக்கம் செய்ய வேண்டும் என்று, வார்டு உறுப்பினர்கள் பஞ்சாயத்தில் கூட்ட தீர்மானத்தில் கையெழுத்திட்டுள்ளனர். கடந்த சுதந்திர தின விழாவை முன்னிட்டு கடந்த, ஆகஸ்ட் , 15-தேதியில் நடந்த கிராம சபை கூட்டத்தில், பொதுமக்கள் மத்தியில் பஞ்சாயத்து, தலைவர் சித்ரா சில வார்டு உறுப்பினர்கள் பஞ்சாயத்து திட்ட பணிகளுக்கு கமிஷன் கேட்பதாகவும், சில கவுன்சிலர்கள், சித்ரா கமிஷன் பெற்றுக் கொண்டு பணிகளை செய்வதாக குற்றம் சாட்டி கொண்டனர். மேலும், இது தொடர்பாக, தர்மபுரி ஜில்லா யூனியன் அலுவலகத்துக்கும் புகார் அனுப்பியுள்ளனர்.இதையடுத்து, திப்பிரெட்டிஹள்ளி பஞ்சாயத்து அலுவலகத்தில் தலைவர் சித்ரா மற்றும் துணைத்தலைவர் அஸ்வினி மற்றும் வார்டு உறுப்பினர்களிடம் தர்மபுரி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முனிரத்தினம், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரேவதி ஆகியோர் விசாரணை நடத்தினார்கள். அப்போது, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முனிரத்தினம் ஒரு சார்பாக நடந்து கொள்வதாக, சில வார்டு உறுப்பினர்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், தலைவர் சித்ரா, சில வார்டு உறுப்பினர்கள் பஞ்சாயத்து பணிக்கு கமிஷன் கேட்பதாகவும், சில வார்டு உறுப்பினர்கள் சித்ரா பசுமை வீடு உள்ளிட்ட பணிகளுக்கு கமிஷன் பெற்று வருவதாகவும், பஞ்சாயத்து நிதியில் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாகவும், மாறி, மாறி குற்றச்சாட்டு தெரிவித்தனர். மேலும், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முனிரத்தினம் பஞ்சாயத்து, தலைவர் சித்ராவுக்கு ஆதரவாக செயல்படுவதாக பஞ்சாயத்து, அலுவலகம் முன் திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர். இதுகுறித்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முனிரத்தினத்திடம் கேட்ட போது, திப்பிரெட்டிஹள்ளி பஞ்சாயத்து, தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து இன்று(நேற்று) விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில், இதுவரை செயல்படுத்தப்பட்ட பணிகள் குறித்து வார்டு உறுப்பினர்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கவில்லை.தவறை மற்ற வார்டு உறுப்பினர்கள் தட்டி கேட்டால் எல்லாத்துக்கும் சேவை செய்யணும்னு என்ன அவசியம் திமுக தலைவரே கமிஷன் அடிச்சிதா பொழப்பை ஓட்டுகிறார் என்று பொதுவாக சொல்லுகிறாராம், இதில் எந்த தலைவரை சொல்லுகிறார் என்பது ஒரு சந்தேகத்தை எழுப்புகிறது ?மேலும், தலைவர் சித்ரா மீதான நம்பிக்கை தீர்மானம் கொண்டு வர வேண்டும் என, சில வார்டு உறுப்பினர்கள் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளதாக கூறினார்கள். ஆனால் மனு மீது விசாரணை செய்வதாகஎங்களுக்கு இதுவரை எந்த உத்தரவும் வரவில்லை. மக்களுக்காக சேவை செய்ய வரும் தலைவர்கள் தமிழக அரசை யாமாற்றி பொழப்பு நடத்த வர்றாங்க, இது போன்ற யாமாற்று வேலை கொண்ட நபர்களை தமிழக அரசு வேடிக்கை பார்த்தால் தமிழக அரசு மீதும், தர்மபுரி மாவட்டத்தை வழி நடத்தும் ஆட்சியர் மீதும், மக்கள் நம்பிக்கை இழக்க நேரிடும் என்பதை தமிழக அரசு உணர்ந்தால் ! "நீதி வெல்லும்" என்பதை சமூக ஆர்வலர்களும், பாதிக்கப்பட்ட வார்டு உறுப்பினர்களும்,தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்... பாதிக்கப்பட்ட சாதாரண வார்டு உறுப்பினர்களுக்கு தெரியும்போது தமிழக அரசுக்கு ???
Comments
Post a Comment