மக்களுக்கான நலத்திட்டங்களை தடுத்து மட்டமான அரசியல் செய்கிறது ஒன்றிய பாஜக ! திமுக ஆலோசனை கூட்டத்தில் பி.எஸ். சரவணன் குற்றச்சாட்டு..

  தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பொம்மிடி ஊராட்சியில் பாப்பிரெட்டிப்பட்டி திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் பி.எஸ். சரவணன் தலைமையில் ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது.

மெடிக்கல் சத்தியமூர்த்தி  பாப்பிரெட்டிப்பட்டி திமுக ஒன்றிய செயலாளர் முத்துகுமார், பொம்மிடி நகரசெயலாளர் கெளதமன், மற்றும் கழக பொறுப்பாளர்கள் 200 மேற்பட்ட தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பொதுமக்களின் குறைகள் நிறைகள் கேட்கப்பட்டது. அப்போது பொதுமக்கள் சிலர் முக்கிய பகுதிகளுக்கு பேருந்து வசதி வேண்டும் என கோரிக்கை விடுத்தபோது,  பி எஸ் சரவணன் கூறுகையில் பொம்மிடியிலிருந்து  ஏற்காடு, மதுரை, திருப்பதி, திருச்சி, போன்ற முக்கிய பகுதிகளுக்கு பேருந்து வசதிகள் உறுவாக்கித்தரப்படும் என மக்களிடத்தில் உறுதியளித்தார். பிறகு  தமிழக மக்களுக்கு கொடுக்க வேண்டிய நலத்திட்டங்களை பாஜக அரசு தடுத்து தமிழக மக்களிடத்தில் திமுகவின் ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்படுகிறது. மற்றும் திட்டம் போட்டு நிதி அமைச்சர் மீது காலணி வீசி அரசியல் செய்வோம் என சமூகத்தின் அமைதியை சீர்குலைக்க திட்டமிடும் அரசியல் மாடலுக்கு அண்ணாமலை தான் சரியான ஆதாரம்,  இது போன்ற கேடுகெட்ட மட்டமான அரசியல் யாரும் செய்யமுடியாது அப்படி செய்தாலும் திமுகவை அழிக்க முடியாது. ஒன்றிய அரசின் செயலை கண்டு திமுக பயந்து போகாது தமிழக மக்களுக்கு சேவை செய்வதில் திமுக  துணிந்து செல்லும் என்றார்.

Comments