எரிபொருள் விலை உயர்வு: தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்

ஒன்றிய அரசின் வரி குறைப்பால் பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரி ரூ.1.95 குறைந்துள்ளது. மேலும், பெட்ரோல் மீதான வரி ரூ.5 குறைக்கப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் ரூ.4.95 குறைக்கப்பட்டுள்ளது. மக்களவையில் நேற்று விலைவாசி உயர்வு குறித்த விவாதத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், எரிபொருள் மீதான வரியை மாநில அரசு குறைக்கவில்லை என கூறினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், " பெட்ரோல், டீசல் மீதான வரியை ஒன்றிய அரசு குறைப்பதற்கு முன்பே தமிழக அரசு குறைத்துள்ளது. ஒன்றிய அரசின் வரி குறைப்பால் பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரி ரூ.1.95 குறைந்துள்ளது. மேலும், பெட்ரோல் மீதான வரி ரூ.5 குறைக்கப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் ரூ.4.95 குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.


Comments