இந்திய பொருளாதாரம் அதிவேகமாக வளர்கிறது: லோக்சபாவில் நிர்மலா சீத்தாராமன் உரை

புதுடில்லி: நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டதால் பொருளாதாரம் மீ்ண்டது என என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தராமன் பார்லி.யில் உரையாற்றினார்.




பார்லிமென்டில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு, இரு சபைகளையும் இரண்டு வாரங்களாக முடக்க காரணமாக இருந்த விலைவாசி உயர்வு குறித்த விவாதம், இன்று லோக்சபாவில் வரவுள்ளது.


பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதில் விலைவாசி உயர்வு குறித்து விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டு வந்தன. 
இதையடுத்து சபை அலுவல்கள் குறித்த தகவல்களை லோக்சபா செயலகம் வெளியிட்டது. அதில், இன்று (ஆக.01) தேதியன்று விலைவாசி உயர்வு குறித்த விவாதம் இடம் பெற்றுள்ளது. லோக்சபா விதி எண் 193ன் கீழ், இந்த விவாதத்துக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், விலைவாசி உயர்வு குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இன்று (ஆக.01) லோக்சபாவில் உரையாற்றியது, கொரோனா தொற்று பாதிப்பால், உலகமே பொருளதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்கிறது. உலகிலேயே அதி வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியா விளங்குகிறது. நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டதால் பொருளாதாரம் மீண்டு வளர்ச்சி கண்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.


காங்., வெளிநடப்பு


விலைவாசி உயர்வு குறித்து விவாதம் பார்லிமென்டில் இன்று நடைபெற்றபோது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் புறக்கணித்து வெளிநடப்பு செய்தன.


ராஜ்யசபாவில் எப்போது ?



பொதுவாக லோக்சபாவில் விவாதம் நடந்து முடிந்த பின், ராஜ்யசபாவில் நடத்தப்படுவது வழக்கம்.இதன்படி, 'வரும் ஆக.02ம் தேதி ராஜ்யசபாவில் விலைவாசி உயர்வு குறித்த விவாதம் நடைபெற திட்டமிடப்பட்டு உள்ளதாக ராஜ்யசபா செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Comments