பாப்பிரெட்டிப்பட்டி அருகே 4 வருடமாக மது விற்பனை செய்து வந்தவர்கள் ! வீட்டில் பதுக்கி வைத்திருந்த 731 மது பாட்டில்கள் பறிமுதல். 2 பெண்கள் கைது.
தார்மபுரி மாவட்டம் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்தில் பல்வேறு நபர்கள் கள்ளத்தனமாக மதுபாட்டில் வ்விற்றுவந்தனர். பொதுமக்கள் பலமுறை காவல்துறைக்கும் 1077 க்கும் தொடர்பு கொண்டு புகார் செய்தாலும், நடவடிக்கை எடுக்காமல் காத்துக்கிடந்த அதிகாரிகள் மீது மக்கள் வெறுப்படைந்த நிலையில் தற்போது உள்ள தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து ஆலோசனை செய்து கள்ளத்தனமாக மது விற்பனை செய்வோர் மீது அதிகாரிகள் பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற அறிவித்தார். அதனைத்தொடர்ந்து ஆங்காங்கே காவல்துறை போதைப்பொருள் விற்பவோர் மீது நடவடிக்கை எடுத்துவருகிறது. நம்ம ஊர் காவல்துறை மட்டும் சும்மாவா ? அரூர் டிஎஸ்பி பெனாசிர் பாத்திமா அவர்களுக்கு மறைமுகமாக வந்த தகவலின் அடிப்படியில் டிஸ்பி விரைவாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன் பேரில் பாப்பிரெட்டிப் பட்டி அருகேயுள்ள புதுப்பட்டியில் ,வீட்டில் மறைத்து வைத்து சட்ட விரோதமாக மது பாட்டில் விற்பனை செய்ததாக ராணி (வயது 45) கந்தாயி (வயது 62) என்ற இரு பெண்களை அ.பள்ளிப் பட்டி போலீசார் நேற்று கைது செய்தனர்.
அவர்களின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ 1 லட்சம் மதிப்புள்ள 731 பிராந்தி மற்றும் பீர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் அடைக்கப்பட்ட குற்றவாளிகள் நான்கு வருடமாக மதுபானம் விற்றுவந்தது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment