1700 மணி நேரம் தேடுதல் ! பிடிபட்ட 48 கஞ்சா பார்ட்டிகள் !! மாஸ் காட்டிய அரூர் DSP பெனாசிர் பாத்திமா !
1700 மணி நேரம் தேடுதல் ! பிடிபட்ட 48 கஞ்சா பார்ட்டிகள் !!!
மாஸ் காட்டிய அரூர் DSP பெனாசிர் பாத்திமா
தமிழகத்தில் பல்வேறு இடங்களில்
இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் ஊடுருவி சமூகத்தையே சீரழிக்கும் மிகப்பெரிய ஆயுதம் கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள். இது போன்ற ஆபத்தான போதைப்பொருட்களை கல்லூரி மாணவர்களிடையே கொடுத்து அதனை வியாபாரம் செய்து வருகின்றது ஒரு மர்மமான கும்பல். அந்த மர்மமான கும்பலை பிடிக்க தமிழக காவல்துறை பலக்கோணங்களில் முயற்சி எடுத்த வருகின்றனர். அப்படி முயற்சி எடுத்ததில் தர்மபுரியில் உள்ள ஒட்டுமொத்த காவல்துறையும் திரும்பி பார்க்கும் அளவில் அரூர் காவல் துறையினர் சுமார் 1700 மணிநேரம் களத்தில் இறங்கி கஞ்சா பரவும் முக்கிய பகுதிகளான பாப்பிரெட்டிப்பட்டி, அ. பள்ளிப்பட்டி, அரூர், கோட்டப்பட்டி, பொம்மிடி, கடத்தூர், கம்பைநல்லூர், கோபினாதம்பட்டி கூட்டுரோடு, போன்ற இடங்களில் கஞ்சா விற்றுவந்துள்ளனர். இந்த தகவல்கள் ரகசியமாக அரூர் காவல் துணை கண்காணிப்பாளர் பெனாசிர் பாத்திமா அவர்களுக்கு வந்த தகவலை அடுத்து '' வேட்டைக்கு போகும் புலி பதுங்கி பாயுவதைப்போல" காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர்களுக்கே தெரியாமல் மாஸ்டர் பிளான் செய்து 48 பேரை 3-150 கிலோ கிராம் கஞ்சாவுடன் பிடித்துள்ளார் DSP பெனாசிர் பாத்திமா அவர்கள்.
இவர்களுடன் அரூர் காவல் துறையினர் தனிபடையில் இறங்கி பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. அரூரில் கொடி கட்டி பறக்கும் லாட்டரி விற்பனையால் பல்வேறு குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்தன. இந்த லாட்டரி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அவ்வப்போது கோரிக்கை விடுத்த நிலையில், அரூர் காவல் துணை கண்காணிப்பாளர் பெனாசீர்பாத்திமா தலைமையில் பேருந்து நிலையம், மஜீத் தெரு, கச்சேரிமேடு, 4 ரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள மொபைல் ஷாப், டீக்கடை உள்ளிட்ட கடைகளில் கேரளா லாட்டரி விற்பனை தொடர்ந்து நடைபெறுவதாக வந்த தகவலின் பெயரில் காவல்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது கடைகளில் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டுகளை மறைத்து வைத்து விற்பனை செய்த விற்பனையாளர்களை கையும், களவுமாக லாட்டரி சீட்டுகளுடன் பிடிக்கப்பட்டனர். இதில் பெளவுருதீன், முகமதுஷெரீப், சாதுல்லா, அர்ஷத், சான்பாஷா, சுலைமான், முகமது உமர், சிவகுமார் ஆகிய 8 நபர்கள் மீீது அரூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து அரூர் கிளை சிறையில் அடைத்தனர்.
இது போன்ற அதிரடி செயல்களில் ஈடுபடும் DSP பெனாசிர் பாத்திமா அவர்களை மக்கள் வெகு விமர்சியாக கொண்டாடி வருகின்றனர். எத்தனையோ காவல் துறையினர் உயர் அதிகாரிகள் இப்பகுதியில் பணியாற்றி சென்றனர். ஆனால் அவர்கள் யாரும் இதுபோன்ற இல்ல ! ஆனா இந்த DSP பொசுக்குன்னு கிளினிங் ஆள் ஏறியா செட்டப்பில் இப்படி பன்னா சைடு வருமானத்துக்கு என்னப்பா பன்றதுன்னு அரூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட காக்கி சட்டைகள் புலம்பி வருகின்றனர் என்று காவல் துறை வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இக்காலத்தில் இருக்கும் இளைய சமுதாயத்தை கெடுக்கும் வகையில் உள்ள எந்த செயலாக இருந்தாலும் அதை உடனடியாக தடைசெய்ய வேண்டும், மற்றும் ஒரு சில காவல் துறையினர் சமூக விரோதிகளின் கைப்பிடியில் இருந்து கொண்டு மறைமுகமாகவே உதவி செய்து வருகின்றனர். அப்படிப்பட்ட காவல் துறையினர் மீதும் உயர் அதிகாரிகள் மன்னிப்பு கொடுக்காமல் தண்டித்தால் இந்த சமூகம் திருந்தும் என சமூக ஆர்வலர்கள் தங்களது கருத்தினை தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களும் இளைய சமுதாயத்தை போதை பொருள் பழக்கத்தில் இருந்து காப்பாற்ற வேண்டு்ம் என ஆணை பிறப்பித்தார். அப்படி முதல்வரின் அறிக்கையை கண்டு எத்தனை மாவட்டத்தில் காவல் துறையினர் தனது கண்ணியமான பணியை செய்து வருகிறார்கள் என்பது தெரியவில்லை ஆனால் நமது தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு கலைச்செல்வன்,
அவர்களின் வழிகாட்டுதலில் இது போன்ற நடவடிக்கைகளை DSP பெனாசிர் பாத்திமா அவர்கள் செய்து வருவது அரூர் பாப்பிரெட்டிப்பட்டி கடத்தூர், பொம்மிடி, போன்ற பகுதகளில் உள்ள மக்களுக்கு பெரும் நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. ஆனா சைடு வாக்கில் குற்றவாளிகளுக்கு தோள் தட்டி லஞ்சம் வாங்கும் ஒரு சில காவல் அதிகாரியை விற்றாதிங்க சா.......ர்....!!! என்பதே மக்களின் இறுதி குறல்...
Comments
Post a Comment