பிரதமர் மோடி - முதல்வர் ஸ்டாலின் நெருக்கம்

சென்னை : செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவில் பங்கேற்ற, பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் மகிழ்ச்சியாக உரையாடினர்.

தமிழகத்தில், தி.மு.க., - பா.ஜ., இடையே மோதல் நிலவினாலும், சமீப காலமாக தி.மு.க., நிலைபாட்டில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. நேற்று செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவுக்கு வந்த பிரதமரை வரவேற்ற, தி.மு.க., அமைச்சர்கள் அவருடன் மகிழ்ச்சியாக உரையாடினர்.  விழாவுக்கு வந்த பிரதமரை, முதல்வர் மகிழ்ச்சி பொங்க வரவேற்றார். மேடையில் இருவரும் சிரித்தபடி பேசிக் கொண்டிருந்தனர். முதல்வர் பேசும்போது, கொரோனாவால் தான் பாதிக்கப்பட்டிருந்தபோது, பிரதமர் பேசி நலம் விசாரித்ததை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

விழாவில் மணல் சிற்பம் வரைந்த, சிற்பக் கலைஞர், பிரதமர் நரேந்திரமோடி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் இருக்கும் சிற்பத்தை வரைந்தார். இருவர் நெருக்கம், அரசியல் வட்டாரத்தில், பல்வேறு யூகங்களை ஏற்படுத்தி உள்ளது.

Comments