வந்தவர்களை முதலில் அமர வைத்து விசாரணை செய்யுங்கள் அரூர் காவல் துணை கண்காணிப்பாளர் அறிவுறுத்தல் !
தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியில்,குடும்ப பிரச்சனைகள், நிலப்பிரச்சனைகள், என பல்வேறு பிரச்சனைகள் தினந்தோறும் அரூர் காவல்நிலைய வாசலை தொட்டுச்சென்று போகிறது. அதனோடு ஒரு வயதான தம்பதியர், அரூர் டி. எஸ். பி. அலுவலகத்தில் 15-07-2022 அன்று காலை 11 மணியளவில் காத்துக்கிடந்தனர். இதில் முதியவர் ஒருவருக்கு கால்கள் சிறிது செயலிழந்து நடக்க முடியாத அளவிற்கு தடுமாறி நின்றிருப்பதை கண்ட டி எஸ் பி அலுவலகத்தில் இருந்து வெளியே வந்து எதற்காக இவங்க நிக்கிறாங்க..ஏப்பா முதல்ல ஐயாவுக்கு சேர் போடுங்கப்பா ! யாராவது இப்படி வந்தா முதல்ல உக்கார சொல்லுங்கப்பா என்று தனது அலுவலகத்தில் இருந்து ஒரு நாற்காலியை கொடுத்து அந்த நடக்க முடியாத தாத்தாவிடம், டி. எஸ். பி. தனது இயல்பான வார்த்தைகளால் விசாரணையை தொடங்கி ஐயா இனி நீங்க இங்க வராதீங்க உங்க இடத்துக்கு நாங்க வந்து பிரச்சனையை தீர்த்துவைப்போம், கவலைப்படாம போங்க என மிகுந்த மரியாதையுடனும். ஆறுதலோடும் டி எஸ் பி நடந்த கொண்டதை கண்ட அந்த முதியவரின் தம்பதி முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி , நமக்கு தீர்வு கிடைக்குமா கிடைக்காதா என்று சந்தேகத்துடனும் பதட்டத்துடனும் மனா அழுத்தத்தில் வந்த அந்த தாத்தா சற்று நம்பிக்கையை சந்தித்துவிட்டது போல பெருமூச்சுவிட்டார்.
எப்படியோ மன அழுத்தத்தில் வந்த முதியவர்கள் அரூர்
டி எஸ் பி கொடுத்த அரவனைப்பால் மனம் நெகிழ்ந்து போயுள்ளனர் . டி எஸ் பி யின் செயலால் அவர்களின் மன அழுத்தம் அறிவியல் ரீதியாக குறையும் என்பது பிறகுதான் தெரிந்தது... பிரச்சனையோடு வருபவர்களை அவர்களின் மன நிலையை புரிந்துகொண்டு அவர்களோடு உயர் அதிகாரிகள் இப்படி சகஜியமாக பழகி பேசினால் அவர்களின் மன அழுத்தத்தில் இருந்து சற்று குறைந்து அதிகாரிகள் சொல் படி கேட்பார்கள் என அங்கிருந்த காவல் துறையினர் கூறினர். அட இது கூட நல்ல ஐடியாவா இருக்கேன்னு மனதில் தோன்ற ஆரம்பித்து விட்டது. இனி என்னதான் எதிர் கட்சிக்காரர் நம்மிடம் கோபாமாக இருந்தாலும் கொஞ்சம்.., கொஞ்சம்.., அன்போடு நடந்தால் எல்லாமே திசை மாறி போய்விடும் பான்னு.. நாங்களும் சைலண்ட்டாக அங்கிருந்து கிளம்பி விட்டோம்... உயர் அதிகாரிகள் மற்றும்
டி எஸ் பி இப்படி இருந்தால் போதுமா அதற்கு கீழ் உள்ள அதிகாரிகளும் இப்படி இருந்தால் நாங்கள் இவ்வளவு தொலைவு வர வேண்டியதில்லை என பாதிக்கபட்ட பெரியவர் புலம்பி சென்றார்...
Comments
Post a Comment