தமிழில் பூஜை நடப்பதில்லையே! மதுரை ஆதீனம் ஆதங்கம்...?? அய் அய்யோ பாஜகவிற்கும் அண்ணாமலைக்கும் குளிர் காய்ச்சல் வந்திடப்போது திராவிட கட்சிகள் சமூகவலைதளங்களில் கிண்டல் !


சிவகங்கை மாவட்டம் திருப்புத்துாரில் நடந்த, தமிழ் வேத ஆகம பயிற்சி நிறைவு விழாவில், மதுரை ஆதீனம் பேசியதாவது:கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யலாம் என ஒரு கூட்டம் கூறுகிறது; இன்னொரு கூட்டம், செய்யக் கூடாது என்கிறது.பெண்கள் கூந்தலில் இயற்கையிலேயே மணம் உண்டா என பாண்டிய மன்னனுக்கு எழுந்த சந்தேகத்தை தீர்க்க, தமிழ் புலவராக சிவபெருமானே காட்சி அளித்தார்.


வடமொழி, தமிழ் எதிலும் பூஜைகள் செய்யலாம். அந்தந்த மொழிகளில் பூஜை செய்பவர்கள் செய்யட்டும். ஆனால், தமிழில் பூஜை செய்வதை தடுக்க கூடாது.தமிழ், தமிழ் என்பவர்கள் வீடுகளில் கூட, தமிழில் பூஜைகள் நடப்பதில்லை. பெண்மையை போற்ற வேண்டும். மொழி உணர்வுடன் வாழ வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

இப்படி மதுரை ஆதினம் பேசியதால் பாஜகவிற்கும் அண்ணாமலைக்கும் குளிர் காய்ச்சல் வந்திடப்போது என திராவிட கட்சிகள் சமூகவலைதளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர். 

Comments