தருமபுரி மாவட்டம், பொம்மிடி அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் இருவர் பலி.

தருமபுரி மாவட்டம், பொம்மிடி அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் இருவர் பலி.

 தருமபுரி மாவட்டம், பொம்மிடி அடுத்த சில்லாரஅள்ளியை கவிநிலா நர்சிங் படித்து முடித்துவிட்டு வேலைத்தேடிக்கொண்டிருந்தார். இந்நிலையில் பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு இன்டர்யூக்கு செல்ல  பூனையானூரை சேர்ந்த  தமிழரசன். என்கிற கவிநிலவின் நண்பருடன் பைக்கில் சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது பொம்மிடி அடுத்த ஒட்டுப்பள்ளம் என்கிற இடத்தில் வந்துக்கொண்டிருந்த போது,  எதிரே வந்த கார் பைக் மீது மோதியது இதில் தமிழரசன் சம்பவ இடத்திலியே உயிரிழந்தார், படுகாயமடைந்து உயிருக்க ஆபத்தான நிலையில்  கவிநிலவை  பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி்கப்பட்டனர்.  உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த கவிநிலவை மேல்சிகிச்சைக்கு சேலம் அழைத்து செல்ல வென்டிலேட்டருடன் கூடிய ஆம்புலன்சுக்காக சுமார் 2 மணி நேரமாக கத்திருந்தனர். ஆனால் ஆம்புலன்ஸ் வராததால் கவிநிலவும் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அப்பகுதியில் உள்ள மக்கள் கூறும் போது,  பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் வென்டிலேட்டர் ஆம்புலன்ஸ் இல்லாததால் பறிதாபமாக உயிர் போனது. இதனால் இப்பகுதியில்  வென்டிலேட்டர் வசதியுடன் கூடிய ஆம்புலன் எப்போதும் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்

Comments