தருமபுரி அருந்ததிய இளைஞர்கள் மீது தாக்குதல் சிபிசிஐடி விசாரணை கோரி ஆர்ப்பாட்டம்

தருமபுரி அருந்ததிய இளைஞர்கள் மீது தாக்குதல் சிபிசிஐடி விசாரணை கோரி ஆர்ப்பாட்டம்
தருமபுரி ஜூன் -10,
தொப்பூர் அருந்ததியர் இளைஞர்கள்  தாக்குதல் சம்பவத்தில் சிபிசிஐடி விசாரணை நடத்தகோரி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ,விடுதலைச்சிறுத்தைகள்,திராவிடர் கழகம்,ஆதித்தமிழர் பேரவை ,தலித் விடுதலை இயக்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருந்ததியர் இளைஞர்கள் ஜிவாதமிழ்செல்வன் சசிதரன் ஆகியோர் மீது சாதிவெறியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.தாக்குதலில் சிவாஎன்பவரின்கால்வெட்டப்பட்டுள்ளது.
மற்ற இளைஞர்கள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர்.இச்சம்பவத்தை தொப்பூர் காவல்துறை விபத்து என்று பதிவு செய்துள்ளது.இச்சம்பவத்தை மூடிமறைக்கும் விதமாக தருமபுரி மாவட்ட காவல்துறை செயல்படுகிறது.
எனவே இச்சம்பவம் குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்தவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் த.ஜெயந்தி தலைமைவகித்தார்.
தலைமை நிலைய செயலாளர் தமிழ்செல்வன்,மாநில அமைப்பு செயலாளர் கி.கோவேந்தன்,முதன்மை செயலாளர் ஏ.சி.பாவரசு , மண்டசெயலாளர் பொ.மு.நந்தன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.மாரிமுத்து , தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் டி.மாதையன் மாவட்ட தலைவர் டி.எஸ்.ராமச்சந்திரன் பொருளாளர் கே.கோவிந்தசாமி, திராவிடர் கழக மாநில அமைப்பு செயலாளர் ஊமைஜெயராமன் தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட தலைவர்கள் சபாபதி ,தலித் விடுதலை இயக்க தலைவர் கருப்பையா ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் முருகன்‌ஆகியோர் பேசினர்.

Comments