டிக்டாக் போல மாறுகிறது இன்ஸ்டா கிராம் திரை..!


டிக்டாக் செயலி இந்தியாவில் தடை செய்யப்பட்டதை தொடர்ந்து, ஷார்ட் வீடியோ செயலிகளான இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், மோஜ், ஜோஷ் உள்ளிட்ட பல்வேறு செயலிகளிடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இதில் அதிக பயனர்களை கொண்ட இன்ஸ்டாகிராமை மெட்டா நிறுவனம் வாங்கிய நிலையில் வாடிக்கையாளர்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப பல்வேறு வசதிகளை வழங்கி வருகிறது.


இந்நிலையில், டிக்டாக்கில் வீடியோவை முழு திரையிலும் பார்க்கக் கூடிய வசதி, சமீபத்தில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் திரையிலும் கொண்டு வரப்பட்டது. இதனிடையே இந்த வசதியை இன்ஸ்டாகிராம் ஹோம் பேஜிலும் கொண்டு வர மெட்டா நிறுவனம் திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் நேவிகேஷனிலும் பல்வேறு மாற்றங்களை கொண்டு வரவும் சோதனை முயற்சிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த வசதி கொண்டு வரப்படும் பட்சத்தில், இன்ஸ்டாகிராமில் பதிவிடப்படும் புகைப்படங்கள் முழு திரையிலும் தோன்றும்.

Comments