நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டம் பள்ளிபாளையத்தைசேர்ந்த ஹரிணி பிரியா ஆசிய அளவிலான வலுதூக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். இவருக்கு பள்ளிபாளையம் பஸ் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. வெற்றிபெற்ற வீராங்கனையை ஊர்வலமாக வீடு வரை அழைத்து சென்றனர். இந்த நிகழ்ச்சியில் ஜிம் பயிற்சியாளர் ராஜா செல்வம் பழனியப்பன் கோபால் இளங்கோ மற்றும் வீரர் வீராங்கனைகள் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாளர் கணேஷ்
Comments
Post a Comment