நாமக்கல்லை சேர்ந்த ஹரிணி பிரியா 57- கிலோ எடைப் பிரிவில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.


ஆசிய வலுதூக்கும் போட்டியில் பள்ளிபாளையம் வீராங்கனை தங்கப் பதக்கம் வென்று சாதனை

சர்வதேச மற்றும் ஆசிய வலுதூக்கும் போட்டி கோவையில் கடந்த 17ஆம் தேதி நடந்தது. இந்தப்போட்டியில் சப் ஜூனியர், ஜூனியர், மாஸ்டர் மற்றும் ஆண்கள் பெண்கள் என்று தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டியில் இந்தியா மட்டுமின்றி கஜகஸ்தான் மங்கோலியா ஓமன் குவைத் வங்கதேசம் நேபாளம் ஜப்பான் ஈரான் உட்பட 11 நாடுகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.


 இந்த போட்டியில் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியை சேர்ந்த சௌந்தர் அவர்களின் மகள் ஹரிணி பிரியா சப்-ஜூனியர் 57கிலோ எடைப் பிரிவில் கலந்துகொண்டு முதல் பரிசான தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். 

இந்த வீராங்கனைக்கு பள்ளிபாளையம் பஸ் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்து கௌரவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஜிம் பயிற்சியாளர் ராஜா, ஜிம் பழனியப்பன், செல்வம், கோபால், ரமேஷ், இளங்கோ கண்ணன், சந்திரசேகர் மற்றும் வீரர் வீராங்கனைகள் ஊர் பொதுமக்கள் திரளாக வந்திருந்து வெற்றிபெற்ற வீராங்கனைக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். மேலும் தங்கப்பதக்கம் வென்ற வீராங்கனையை ஊர் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து ஊர்வலமாக அழைத்து சென்றனர்.

Comments