ஆதிமுக ஆட்சியில் அரசு மருத்துவமனை புறக்கணிக்கப்பட்டதா ?
பாப்பிரெட்டிப்பட்டி அரசு பொது மருத்துவமனை (GH) -- திமுக ஆட்சியில் நிறுவப்பட்டதால், அதிமுக ஆட்சியில் புறக்கணிக்கபட்டதா?
தருமபுரி மாவட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதிக்கு தலைமை இடமான பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள அரசு பொது மருத்துவமனையானது ஆரம்ப சுகாதார நிலையம் (PH) என்ற நிலையில் இருந்து 1997-ஆம் ஆண்டு திமுக அரசால் தரம் உயர்த்தப்பட்டு 2008-ஆம் ஆண்டு புதிய மருத்துவமனை கட்டிடங்களில் நடைமுறைக்கு வந்தது. இதன்மூலம் பாப்பிரெட்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் தினமும் சுமார் 600 முதல் 700 நோயாளிகளும், 50க்கும் மேற்பட்ட உள் நோயாளிகளும் மருத்துவ வசதி பெற்று வருகின்றார்கள். ஆனால் படுக்கை வசதிகள் சுமார் 30 மட்டுமே உள்ளது, இதனால் நோயாளிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
பாப்பிரெட்டிபட்டி அரசு பொது மருத்துவமனையில் தற்போது 7-மருத்துவர்கள், 7-செவிலியர்கள், 2-ஃபார்மசிஸ்ட்கள், 7-அலுவலக பணியாளர்கள், ஒரு லேப் டெக்னீசியன் உட்பட 24 அரசு ஊழியர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். இவர்களால் உள் மற்றும் புற நோயாளிகளுக்கு முழுமையாக மருத்துவம் பார்க்க முடியாத சூழ்நிலையில் உள்ளது. இங்கு தேவையான மருத்துவ உபகரணங்களும், மருத்துவர்களும் மற்ற மருத்துவ பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் இல்லாத காரணத்தினால் நோயாளிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக அரூர், தருமபுரி, சேலம் போன்ற மருத்துவமனைகளுக்கு உயர் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கின்றனர். அவ்வாறு அனுப்பும்போது நோயாளிகள் சில நேரங்களில் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்துவிடுவது அல்லது மருத்துவமனைக்கு சென்ற சிறிது நேரத்தில் இறந்துவிடும் சூழலில் உள்ளதாக தெரிகிறது. ஒருசிலர் அவ்வாறு இறந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆகவே பாப்பிரெட்டிப்பட்டி அரசு பொது மருத்துவமனைக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை வழங்கி, தேவையான மருத்துவ பணியாளர்களை நியமித்து இப்பகுதி மக்களின் நலனை உறுதி செய்ய வேண்டும் என்று இப்பகுதி மக்களால் கோரிக்கை வைக்கப்படுகிறது.
இந்த மருத்துவமனையானது PH-லிருந்து GH-ஆக திமுக ஆட்சியில் தரம் உயர்த்தப்பட்டு கட்டிடங்கள் கட்டி நடைமுறைக்கு வந்ததால் அதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பெரிய அளவில் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லாமல் பின்தங்கிய நிலையில் விடப்பட்டதாகவும், தருமபுரி மாவட்டத்தில் வட்டார அளவிலாக உள்ள மருத்துவமனைகளிலேயே மிகவும் அடிப்படை வசதி குறைந்த நிலையில் எதற்கெடுத்தாலும் தருமபுரி, அரூர், சேலம் போன்ற மருத்துவமனைக்கு உயர் சிகிச்சை செய்ய ஆம்புலன்ஸ் மூலம் நோயாளிகளை அனுப்பி வைப்பதாகவும் இந்த அவல நிலையை மாற்றி பாப்பிரெட்டிப்பட்டி சுற்று வட்டார பகுதி மக்களின் ஆரோக்கியத்தை காக்கும் வகையில் அதிக எண்ணிக்கையிலான படுக்கை வசதிகளுடன் கூடிய MD, DGO (மகப்பேறு மருத்துவர்), X-RAY மற்றும் SCAN எடுப்பவர்கள் உட்பட அனைத்து விதமான உடல் பரிசோதனைகளையும் செய்யும் ஆய்வாளர்களையும், மருத்துவர்களையும், உதவியாளர்களையும் நியமித்து இப்பகுதி மக்களின் நலனை உறுதி செய்ய வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகும்.
மேலும் இதைப்பற்றி பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் உள்ள சமூக ஆர்வலர் முல்லைமுருகன் என்பவர் நமக்கு கொடுத்த தகவலின்படி, பாப்பிரெட்டிப்பட்டி அரசு பொது மருத்துவமனையில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் நோயாளிகளை சுமார் 40 முதல் 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தருமபுரி, அரூர், சேலம் போன்ற பகுதிகளுக்கு உயர் சிகிச்சைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைப்பதாகவும் போகும் வழியிலேயே சிலர் இறந்து விடுவதாகவும், மகப்பேறு காலங்களில் பெண்கள் நீண்ட தூரம் பயணம் செய்வதால் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு மிகவும் சிரமத்திற்கு உள்ளதாகவும், விபத்து போன்ற காரணங்களால் அடிபட்டு மேல் சிகிச்சைக்கு செல்லும் போது ஆம்புலன்சில் ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் தேவைப்படும் உபகரணங்கள் பற்றாக்குறையால் இறப்புகள் அதிகரிப்பதாகவும் தெரிவித்தார். மேலும் தருமபுரி மாவட்டத்தில் மற்ற வட்டாரங்களில் உள்ள மருத்துவமனையில் உள்ள வசதிகளுடன் ஒப்பிடும்போது அனைத்து வகைகளிலும் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே பாப்பிரெட்டிப்பட்டி மருத்துவமனை உள்ளதாகவும் கடந்த காலங்களில் ஆட்சியாளர்கள் இந்த மருத்துவமனையை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டதால் இங்கு எவ்விதமான முன்னேற்றமும் இல்லாமல் ஏழை எளிய, நடுத்தர, வசதி இல்லாத மக்கள் தங்களுக்கு ஏற்படும் உடல் நலம் பாதிப்புக்கு மருத்துவ வசதி பெற முடியாமல் அவதிப்படும் சூழ்நிலையில் உள்ளதாகவும், ஆகவே தற்போதைய தமிழக அரசாவது இப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த மருத்துவமனையை தரம் உயர்த்தி தேவையான மருத்துவ உபகரணங்களையும், மருத்துவர்கள் முதல் அலுவலக ஊழியர்கள் வரை அனைத்தையும் அதிகப்படுத்தி அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்று இப்பகுதி மக்களின் சார்பாகவும், சமூக ஆர்வலர்களின் சார்பாகவும் அரசுக்கு கோரிக்கை வைக்கிறார். இது பற்றி மக்களிடம் கேட்ட போது கடந்த 8 ஆண்டுக்கு முன்பு ஜெயலலிதா அவர்கள் முதல்வராக இருந்த போது இங்கே உயர் கல்வி துறை அமைச்சராக இருந்துவர் பழனியப்பன் அவர்கள் ஏன் இந்த பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனை வசதிக்கு உதவவில்லை
நல்லவன் எந்த பக்கம் இருந்தாலும் மக்கள்ளுக்கு தேவையானதை செய்வான் இங்க யார் நல்லவன் ? யார் அரசியல் ஆதயம்னு பார்க்கலாம் !
செயல்படுமா? தமிழக அரசு!!
Comments
Post a Comment