பண மோசடி வழக்கில் பெண் ஐ.ஏ.எஸ் கைது

 


ராஞ்சி பணப்பரிமாற்ற மோசடி வழக்கு தொடர்பாக, ஜார்கண்ட் சுரங்கத் துறை செயலர் பூஜா சிங்காலை , அமலாக்கத் துறையினர் இன்று கைது செய்தனர்.

ஜார்க்கண்டில் சுரங்கத் துறை செயலராக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி பூஜா சிங்கால் பதவி வகித்து வருகிறார். இவர், குந்தி மாவட்ட கலெக்டராக பதவி வகித்த போது, மஹாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கான நிதியில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது.  

இது தொடர்பாக பூஜா, அவரது கணவரும், தொழிலதிபருமான அபிஷேக் ஜா உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில், அமலாக்கத் துறையினர் சமீபத்தில் சோதனை நடத்தியதில், 17 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. இவரது ஆடிட்டர் கைது செய்யப்பட்டார். அவரை காவலில் எடுத்து, அமலாக்கத் துறையினர் விசாரித்ததில் மேலும், முறைகேடு நடந்ததாக கூறப்பட்ட காலத்தில், பூஜாவின் வங்கிக் கணக்கில், 1.43 கோடி ரூபாய், 'டிபாசிட்' செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறையினர் தெரிவித்தனர்.

இதன் அடிப்படையில், பணப்பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ், பூஜா சிங்கால் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஜார்கண்டில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் பூஜா சிங்கால் விசாரணைக்கு ஆஜரான நிலையில் இன்று அவரை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.

Comments