லக்னோ: பணியில் அலட்சியம் காட்டியது, அரசு உத்தரவைமதிக்காதது போன்ற குற்றாச்சாட்டின் பேரில் உத்திரபிரதேசத்தில் மாநில டி.ஜி.பி., முகுல் கோயல் இன்று திடீரென நீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
உத்திரபிரதேச மாநில டி.ஜி.பி. முகுல் கோயல் இன்று திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை மாநில தலைமை செயலாளர் பிறப்பித்தார். இது குறித்து அரசு தரப்பில் கூறப்படுவதாவது, மாநில டி.ஜி.பி.யாக முகுல் கோயல் தனது பணியில் அலட்சியம் காட்டி வந்துள்ளார். அரசு உத்தரவுகளை மதிக்காமல் ஒழுங்கீனமாக நடந்து கொண்டது, கடமையை செய்வதில் ஆர்வம் காட்டாமல் இருந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது போன்ற அதிகாரிகள் அரசு பணிக்கு தேவையில்லை என்பதால் அவரை அப்பொறுப்பில் இருந்து நீக்கி உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.1987-ம் ஆண்டு ஐ.பி.எஸ். கேடரான முகுல் கோயல், இதற்கு முன் எல்லை பாதுகாப்புபடை டி.ஜி.பி.யாக பணியாற்றி வந்த நிலையில் கடந்தாண்டு ஜூலை மாதம் மாநில டி.ஜி..பி.யாக முகுல் கோயல் பொறுப்பேற்றார்.
Comments
Post a Comment