பள்ளி மாணவியை கத்தியால் குத்தி விட்டு வாலிபர் தப்பி ஓட்டம்.! போலீசார் விசாரணை


மணப்பாறை, திருச்சி மாவட்டம்

மணப்பாறை அருகே பள்ளி மாணவியை கத்தியால் குத்தி விட்டு வாலிபர் தப்பி ஓட்டம். 

காயம் பட்ட மாணவி ஸ்வேதா (16) மருத்துவமனையில் அனுமதி .

திருச்சி மாவட்டம், மணப்பாறை சிறு மலர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஸ்வேதா என்ற சிறுமி  11-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கும் மணப்பாறை பொத்தமேட்டுபட்டியை சேர்ந்த கேசவன் (22) என்பவருக்கும் காதல் ஏற்பட்டு வீட்டை விட்டு வெளியில் சென்று திருமணம் செய்து கொண்டு,பின்னர் ஸ்வேதாவின் தாய்  சண்முகவள்ளி மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் எனது மகளை மீட்டு கொடுங்கள் என்று புகார் அளித்ததின் பேரில் கேசவன் மீது கடந்த 07.06.2021 ம் தேதி AWPS Cr.no: 10/2021 U | S 294(b), 109,366,(A) IPC 11(IV) r/w 12, 17 of PoSco Act வழக்குப்பதிவு செய்து திருச்சி மகிளா நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்று மேற்படி சுவேதா பள்ளிக்கூடம் முடிந்து வீட்டுக்கு வரும் வழியான மணப்பாறை ரயில்வே கேட் அருகில் வந்தபோது கேசவன் என்பவர் கையில் இருந்த கத்தியை கொண்டு ஸ்வேதாவின் கழுத்து மற்றும் தொடையில் குத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்பின்னர் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை சிந்துஜா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சையில் இருந்து வருகிறார். இது சம்பந்தமாக மணப்பாறை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Comments