"பா ம க கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ்" பாப்பிரெட்டிபட்டியில் தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
பா ம க கட்சியின் தலைவராக அன்புமணியை தேர்வு செய்து ஒரு மனதாக ஏற்றுக்கொண்டு தற்போது தமிழக முழுவதும் இன்று தமிழகமுழுவதும் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி பேருந்து நிலையம் முன்பு பா ம க கட்சியின் மாநில இளைஞரணி துணை செயலாளர் ஆனந்த் தலைமையில் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியல் அவர் பேசியதாவது 50 வருடங்களாக திராவிட கட்சியின் ஆட்சியில் தமிழகம் மதுவால் சீரழிந்து வருகிறது. இதற்க்கு முற்று புள்ளி வைப்பதற்காக 2026 ஆம் ஆண்டில் பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சியமைக்கும் என்றார் பிறகு உச்ச நீதிமன்றம் பாலியல் தொழிலை அங்கீகரித்துள்ளது அதனை உங்கள் கட்சி வரவேற்குமா என்ற செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அப்படிப்பட்ட தொழில் இங்கு வந்தால் முதல் எதிர்ப்பே பாட்டாளி மக்கள் கட்சிதான் காரணம் இந்த தமிழக மக்களுக்காக பாட்டாளி மக்கள் கட்சி அயராத உழைத்து கொண்டிருக்கிறது என்றார். இதில் தருமபுரி மாவட்ட துணை செயலாளர் சே. பன்னீர் செல்வம், சத்யராஜ் மாவட்ட துணை தலைவர், ரங்கநாதன் ஒன்றிய செயலாளர், ஆனந்தன் முன்னாள் ஒன்றிய செயலாளர், தங்கராஜ் நகர செயலாளர், கலா நகர பொருளாளர், ராஜலட்சுமி நகர மகளிரணி செயலாளர், கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment