கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் வீபின் (33). சிஆர்பிஎப் வீரர். இவர் விடுமுறைக்காக தன்னுடைய ஊருக்கு சென்று விட்டு விடுமுறையை முடித்து பணிக்காக நேற்று முன்தினம் குருவாயூர் விரைவு ரயிலில் எஸ்-10 பெட்டியில் குடிபோதையில் பயணம் செய்துள்ளார். அப்போது அவர் பயணிகளை பார்த்து ஆபாசமாக பேசிக்கொண்டு வந்துள்ளார். அதனை ரயிலில் வந்த பயணி ஒருவர் தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்து தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். இதனை அறிந்த டிஜிபி சைலேந்திர பாபு இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு ரயில்வே போலீசாருக்கு அறிவுறுத்தினார். அதன்பேரில் ரயில்வே போலீசார் துரிதமாக செயல்பட்டு அவரை கைது செய்தனர்.
Comments
Post a Comment