கழற்றப்பட்ட அம்பேத்கர் புகைப்படம் - சமத்துவ நாளை ஏற்காத BDO ஊழியர்கள் - முதல்வர் என்ன செய்வார்?????

தர்மபுரி பாப்பிரெட்டிப்பட்டி 

தமிழ்நாட்டில் இனி அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல் 14 சமத்துவ நாளாகக் கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பேசிய மு.க.ஸ்டாலின், வடக்கில் உதித்த சமத்துவ சூரியன் அம்பேத்கர். ஏற்றத்தாழ்வை கல்வி, சட்டம், அரசியல் எழுச்சி மூலம் சமப்படுத்திய போராளி அம்பேத்கர். வேண்டாததை நீக்கிய சிற்பி, வேண்டியதை சேர்த்த ஓவியர் அம்பேத்கர் என புகழாரம் சூட்டினார். மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக்குழு உறுப்பினர்களின் கூட்டம் நடந்தது.

அந்தக் கூட்டத்தில் பெரியார் பிறந்தநாளை ‘சமூகநீதி நாளாக’ அறிவித்தது போல் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல் 14ஆம் தேதியை ‘சமத்துவ நாள்’ என்று கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டது.

இந்தக் கோரிக்கையை ஏற்று ஏப்ரல் 14ஆம் தேதி இனி சமத்துவ நாளாகக் கொண்டாடப்படும் என்றும், சமத்துவ நாள் உறுதிமொழி தமிழ்நாடு முழுவதும் எடுத்துக்கொள்ளப்படும். என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்தார். 

ஆனால் அதற்கு எதிராக தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஏப்ரல் 14 அன்று சமதுவனாளாக உறுதி மொழி ஏற்க அனைத்து ஊழியர்களிடம் அறிவிப்பு செய்திருந்தும், 3 அலுவலர்களை தவிர வேறு எந்த அரசு ஊழியர்களும் கலந்து கொள்ளவில்லையாம். அதுமட்டுமல்லாமல் அலுவலகத்தின் வாசலில் மாட்டபட்ட அம்பேத்கர் புகைப்படத்தை  கழற்றி உள்ளே மாற்றுங்கள் என்று ரெகுலர் BDO ஆர்டர் செய்தாராம். உடனே கௌன்சிளர்கள் கூடும் மீட்டிங்ஆளில் வைக்கப்பட்டது.  இதனை அறிந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்ச்சியை சார்ந்த கி அதியமான் ரெகுலர் BDO வை சந்தித்து விவாதம் செய்து படம் எங்கே இருந்ததோ அங்கே மாற்றுங்கள் என்று கோரிக்கை வைத்துச்சென்றார். ஆனால் இதுவரை  , அம்பேத்கரின் புகைப்படம் முதலில் இருந்த இடத்தில் மாற்றவில்லை.. முதல்வர் அறிவித்த ஒரு நாள் அறிக்கையே கடைபிடிக்காத இந்த ஊழியர்கள் வருடம் முழுவதும் தமிழக அரசின் செயல்பாடுகளை நிறைவேற்றுவார்களா என்பதே சந்தேகமாக இருக்கிறது என்று அப்பகுதி மக்களின் கருத்தாக உள்ளது.  வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர்கள் அம்பேத்கரை மட்டும் அவமதிக்கவில்லை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களையும் அவமதித்துள்ளனர்.. இப்படிபட்ட அரசு ஊழியர்கள் மீது தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் என்ன நடவடிக்கை எடுப்பார் ???? 

Comments