தமிழக அரசுக்கு ஒதுக்கிய 5% நிதி ! ஒன்றிய அரசின் செயல்பாடுகள் அம்பலம்


மழை, வெள்ள நிவாரணத்திற்காக தமிழக அரசு கேட்ட ரூ. 6,230 கோடி நிதியில் ஒன்றிய அரசு இதுவரை வெறும் 352 கோடி ரூபாயை மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது தெரியவந்துள்ளது. தமிழ்நாடு அரசின் வருவாய் துறை கொள்கை விளக்கக் குறிப்பேட்டில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட சேதங்களை நிவாரணமாக ரூ. 6,230 கோடி வழங்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடப்பட்டு இருந்தது. ஆனால் ஒன்றிய அரசு வெறும் 352 கோடி ரூபாயை மட்டுமே தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்துள்ளது.


இது தமிழக அரசு கேட்ட தொகையில் வெறும் 5.66% மட்டுமே என்று தமிழ்நாடு வருவாய் துறையின் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும் மழை, புயல், வெள்ளம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால்இது தமிழக அரசு கேட்ட தொகையில் வெறும் 5.66% மட்டுமே என்று தமிழ்நாடு வருவாய் துறையின் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


பெரும் மழை, புயல், வெள்ளம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் மாநிலங்கள் தங்களுக்கு ஒரு குறிப்பிட்ட நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைக்கும். இதனை தொடர்ந்து ஒன்றிய அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டு சம்மந்தப்பட்ட இடங்களில் ஆய்வு செய்து பாதிப்பு தொடர்பாக அறிக்கை அளிக்கும். இந்த குழுவின் பரிந்துரை அடிப்படையில், பாதிக்கப்பட்ட மாநிலத்திற்கு நிவாரண நிதியை ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்வது வாடிக்கை. ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே மாநில அரசு கேட்கும் நிதியை விட மிகக் குறைவான நிதியை ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்து வருகிறது.


Comments